கன்னி ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, கையில் எடுத்த வேலைகளை சிறப்பான முறையில் செய்ய முடிக்க முடியும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.சில முக்கிய பொறுப்புகள் உங்களை நம்பி தரக்கூடும், மேலும் அவற்றை நிறைவேற்ற நீங்கள் அதிக கடின உழைப்பையும் முயற்சியையும் செலுத்த வேண்டியிருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற சிரம பட வேண்டியிருக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். சுபச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் சில பிரச்சனைகள் வரும். சில பெரிய செலவுகள் திடீரென்று எழக்கூடும், அதற்காக நீங்கள் பணம் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்கள் அனுபவ அறிவை பயன்படுத்த நிறைய சந்தர்ப்பங்கள் வரும். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியும். முன் கோபத்தை கட்டுப்படுத்தினால் பல வகையில் நன்மை உண்டாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தன வரவு உண்டாகும். உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமண காரியம் கைகூடும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட நேரம் ஒதுக்க முடியும். வருமானத்திற்கு மீறிய செலவுகள் இருப்பதால் அனாவசிய செலவுகளை அறவே தவிர்க்கவும். தூரத்து பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். பணியிடத்தில் அதிக எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். வேலை செய்பவர்கள் சில தேவையற்ற மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில் ரீதியாக சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும்.
சந்திராஷ்டமம் : 3,4,5 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com