கும்ப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீண்ட காலமாக திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும். குடும்பத்தில் திட்டமிடாத செலவுகள் நிறையவே வரும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் பல நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி கிடைக்கும். மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். முடிந்தவரை அடுத்தவர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சனை வராமல் தடுக்கும். கொடுக்கல் வாங்கலில் வாங்கல் விஷயத்தில் எப்போதும் கவனமாக இருக்கவும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகள் தரப்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிடையே இணக்கமான போக்கும் காணப்படும். குடும்பத்தில் குதூகலமும் இருக்கும். திருமணம் காரியம் கைகூடும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் பூர்விக இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும். வாகனங்களில் செல்லும் போது தொலைபேசியை உபயோகிக்க வேண்டாம். மனம் நிம்மதிக்காக தினமும் தியானம் செய்யவும். நண்பர்களிடம் உங்கள் சுக துக்கங்களை பகிர்ந்துகொள்ளவும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். வீட்டில் உறவினர் வருகை அதிகரிக்கும். குடும்ப நபர்களின் நலனில் அக்கறைகொள்ளவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
சந்திராஷ்டமம் : 14,15,16,17 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com