இந்த வருடம் 2024 மே மாதம் 1-ம் தேதி குரு பகவான் உங்கள் இராசிக்கு ஜென்மாதிபதியும் – ஜீவனாதிபதியுமான குரு பகவான், உங்கள் இராசிக்கு மூன்றில் அமர்கின்றார். (3-ம் இடம் மறைவு ஸ்தானம்) பொதுவாக குரு 3ம் இடத்தில் இருக்கும் போது முயற்சியில் தடை ஏற்படும். குரு 3-ம் இடத்திற்கு வருவது சிறப்பு இல்லை என்றாலும் குருவின் பார்வை பலமான இடங்களில் விழுவதால் நிச்சயமாக பெரிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். குருவின் பார்வைக்கு கோடி நன்மை உண்டு. எந்த இடையூறையும் அவரது பார்வை உடைத்து எறியும். 3-ம் இடம் தைரிய ஸ்தானம் என்பதால் மன உறுதியும், தைரியமும் கூடும். நினைத்ததை உடனே முடிக்கும் ஆற்றல் கொடுக்கும். உங்களுக்கு உதவ பலர் முன் வருவர். உங்கள் இராசிக்கு 7,9,11-ம் இடங்களை அதாவது, சப்தமஸ்தானம், பாக்கியஸ்தானம், லாபஸ்தானம் போன்றவற்றை குருபார்வை செய்வதால், நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் சிறப்பான முறையில் நடக்கும். கணவன் – மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வாங்க வேண்டும் என தவித்த வீடு – மனை வாங்குகிற பாக்கியம் வந்தடையும். பெரும் பதவி வகிப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். அயல்நாடு செல்லும் பாக்கியம் உண்டாகும். திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெறும். தெய்வ அனுகிரகத்தால் உடல்நலம் சீரடையும். குடும்பத்தில் பாகப்பிரிவினை இருந்தாலும் ஓற்றுமை ஏற்படும். விரோதங்கள் விட்டில் பூச்சி போல் மறைந்துவிடும். மனக்குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பொதுவாக மூன்றில் அமர்ந்த குரு, உங்கள் பகையாளிகளை ஆச்சரியப்பட வைக்கும். அளவுக்கு உங்கள் வளர்ச்சி வேகமாக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளி போகலாம். சிறு சிறு பயணங்கள் ஏற்படும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். வார்த்தைகளில் கவனம் தேவை. பண வரவு சற்று சுமாரான நிலையில் தான் இருக்கும் என்பதால் செலவுகளை குறைக்க வேண்டியது அவசியம். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். எதிர்பாராத விதமாக நிறைய அலைச்சல்களை சந்திக்க நேரிடும். உங்கள் முயற்சிகளில் ஒரு சில தடங்கல் ஏற்பட்டாலும் விட முயற்சியால் அதில் வெற்றி பெற முடியும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாக இருக்கும். மனம் போல மாங்கல்யம் அமையும். பிரிந்து இருந்த தம்பதினர் மீண்டும் ஒன்று சேருவார்கள். வாழ்க்கைத்துணையோடு இணைந்து செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையில் ஏற்பட்ட சரிவுகளில் இருந்து மீள முடியும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். கடன் தொகை வசூலாகும். இக்காலக் கட்டத்தில் சகிப்புத் தன்மை மிகவும் அவசியம்.பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகளும் ஏற்படுவதால் பணப் பற்றாக்குறை நீடிக்கவே செய்யும். முக்கியமான விஷயங்களில் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். முக்கிய வேலைகளை நீங்களே செய்வதுதான் நல்லது. வாழ்க்கையில் நடைபெற வேண்டிய முக்கியமான விஷயங்கள் இந்த கால கட்டத்தில் நிறைவேறும்.உத்யோகத்தில் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும், தொழில், வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும். பொதுவாக பார்க்கும் போது குரு பெயர்ச்சி பலன் தரவில்லை என்றாலும் மற்ற கிரகநிலைகள் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் கவலை வேண்டாம்.
பரிகாரம் : விட்டுப்போன முன்னோர் வழிபாட்டினை முறையாக செய்யவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831