Guru Peyarchi Palan 2024 - 2025

Guru Peyarchi Palan
குரு பெயர்ச்சி பலன்கள்
குரு பெயர்ச்சி பலன்கள் 2024
(01-மே-2024 முதல் 01-செப்டெம்பர்-2025 வரை)

இது வரை மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் மே 1ஆம் தேதி அன்று குரு ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். அதாவது 2024 ஆம் ஆண்டில், தேவகுரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி ரிஷப ராசிக்கு மாறுகிறார். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த குரோதி ஆண்டு குரு பகவான் பெயர்ச்சி சித்திரை மாதம் 18ம் நாள் அதாவது ஆங்கிலப்படி (1.5.2024) புதன்கிழமை மாலை 5.21 மணிக்கு கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதத்தில் இருந்து ரிஷப ராசியில் கிருத்திகை இரண்டாம் பாதத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அதன் பிறகு ஜூன் 12 ஆம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதே நேரத்தில், வியாழன் அக்டோபர் 9 ஆம் தேதி வக்ர பெயர்ச்சி அடைந்து பின்னர் பிப்ரவரி 4, 2025 வரை இதோ நிலையில்தான் நகரும். இதற்குப் பிறகு, பிப்ரவரி 4 அன்று வக்ர நிவார்த்தி அடைந்து மே 14 (இரவு 10:36 மணி), 2025 வரை ரிஷபத்தில் சஞ்சரிப்பார். இப்போது ரிஷபத்தில் மாறுவதால் அதிர்ஷ்டம் பெரும் ராசிகள் யார், யார் என்று இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம். குரு பெயர்ச்சியால் மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகள் பலம் பெறுகின்றன. ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் சுமாரான பலன்களை பெறுவதால் பரிகாரம் செய்ய வேண்டும். குரு பெயர்ச்சியால் என்னென்ன பலன் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

9 கோள்களில் சுபகோளாக, வியாழன், குரு, பொன்னவன், தேவ குரு, தனகாரகன், புத்திகாரகன் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் குரு பகவான், ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது குடும்பம் நல்ல முறையில் இருக்கும்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதற்கு 13 மாதங்கள் அல்லது ஒரு வருடம் ஆகும். இப்படி ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு செல்வதையே குரு பெயர்ச்சி என்கிறோம்.

குரு பார்க்க கோடி நன்மை என்றும், கோடி தோஷம் விலகும் என்றும் நம்பப்படுகிறது. குரு பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்று பொதுவாக நம்பலாம், எதிர்பார்க்கலாம்.

ஜாதகத்தில் குரு இருக்கும் ராசி, லக்னம் ஆகியவை பொருத்தும், ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் கோசாரத்தில் வரும் பொழுது நன்மையே செய்வார், அதுவே நடக்கும். தசா நாதனை கோசார குரு பார்க்கும் காலமும் யோக பலன்களே நடக்கும். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற வேண்டுதல்களுக்கு குரு பகவானை வழிபடுவது எல்ல வகையிலும் நன்மை தரும்.

பெரும்பாலும் தமிழக கோவில்களில் குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எல்லாம் வாக்கிய பஞ்சாங்கப்படி தான் நடக்கிறது.

குரு பகவானுக்கு முக்கிய தலமாக கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி பிரசித்தியாக கருதப்படுகிறது.

குருவுக்கு பரிகாரம்:


1. தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து வழிபடுவதும் சிறப்பு.
2. ஏழை எளிய மக்களுக்கு இயன்ற வரை அன்னதானம் செய்வதும் குருவுக்கு செய்யும் பரிகாரம் ஆகும்.
3. வியாழக்கிழமை, பௌர்ணமி தினங்களில் அருகில் உள்ள மகான்கள் மற்றும் சித்தர்களின் ஜீவசமாதிக்கு முறையாக சென்று வழிபட்டால் குருவால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கி குரு அருள் கிடைக்கும்.


ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் ஆலந்தூர் A .வினோத் குமார். Ph.D (Astrology). செல் : +91-9003019831

Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.