கடக ராசி அன்பர்களே, இந்த மாதம் குடும்பத்தில் உங்களுக்கு எதிராக சில எதிர்ப்புகள் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும். குல தெய்வ வழிபாடு சிறப்பை தரும், மனம் மற்றும் பண கஷ்டத்தை சீக்கிரத்தில் போக்கும். எதிர்பாராத பண வரவிற்கும் சாத்தியக்கூறு உள்ளது. குடும்பத்தில், சுப நிகழ்்ச்சிகள் நிகழ்வதால், செலவுகள் சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். பண வரவுகள் ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். குடும்ப பிரச்னை சுமூகமான தீர்வு பெறும். அனாவசியமாக யாருக்கும் வாக்குறுதிகள் கொடுத்து பிரச்சனையில் சிக்கி கொள்ள வேண்டாம். வெளி இடங்களில் குடும்ப விவகாரங்கள் பற்றி பேசாமல் இருக்கவும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் செய்திகள் தங்களுக்கு அனுகூலமாகவே இருக்கும். குடும்பத்தினரின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைப்பதில் தாமதம் ஆகலாம். தொழில், வியபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரிய வரும்.
சந்திராஷ்டமம் : 27,28 - கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com