மகர ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மிகுதியாக இருக்கும். மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். எந்தவொரு பெரிய விஷயத்தையும் செய்வதற்கு முன்பு குடும்ப பெரியோரின் அறிவுரையை கேட்டு செய்யவும். காதல் துணை அல்லது துணைவருடன் ஏதாவது ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். குடும்பப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளவும். எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எப்போதும் நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியும். வீட்டில் அனாவசிய செலவுகளை குறைக்கவும். குடும்ப நபர்களின் ஒத்துழைப்பு நல்ல விதமாக இருக்கும். உங்கள் வித்யாசமான அணுகுமுறையாலும் சாதுரியமான பேச்சாலும் எதையும் சாதிக்க முடியும். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வாழ்க்கைக்கு தேவையான வசதி வாய்ப்புகளை பெருக்கிகொள்ள முடியும். கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் இருக்கும். கடன் பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அதை அடைக்கவும் வழி கிடைக்கும். மன திருப்தியுடன் செய்யும் காரியும் வெற்றி பெரும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். வாகன யோகம் உண்டு. எப்போதும் இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவும். வீட்டிற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். எந்தவிதமான சர்ச்சைகளிலிருந்தும் விலகி, உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்த வேண்டும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கு முன்பு உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனையை பெற்று செய்யவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சந்திராஷ்டமம் : 12,13,14 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com