ரிஷப ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, நீங்கள் எந்த அளவிற்கு நேர்மையாக உழைத்து முயற்சி செய்கிறீர்களோ, அதற்கேற்ப அதிக பலன்களைப் பெற முடியும். உங்கள் முக்கிய காரியங்கள் நாளடைவில் நிறைவேறும். பொருள் வரவு கூடும். குடும்பத்தில் மதிப்பு தானாக உயரும். இனிமையான பேச்சின் மூலம் பலரது உதவி கிடைக்கும். எவ்வளவு சம்பாதித்தாலும் அது போதாமல் வெளியில் கைமாற்ற பணம் வாங்க வேண்டியிருக்கும். திருமணம் தொடர்பான பேச்சுக்கள் சுமூகமாக நடைபெற்று முடியும். குடும்பத்தில் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய வாகன வசதி மற்றும் புதிய வீடு, பேறு அமையவும் வாய்ப்புண்டு. சொத்து பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைத்து அதன் மூலம் பணம் கைக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கும் ஏற்படும். குடும்பத்தில் செலவுகளும் ஒரு சில பிரச்சனைகளும் வரக்கூடும். அலைச்சல்கள் குறையும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு இருந்த தெய்வ வழிபாட்டை தவறாமல் மேற்கொள்ளவும். உடல் நலத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. பண விவகாரங்களில் யாரையும் நம்ப வேண்டாம். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும், உறவுகளை மேம்படுத்துவதிலும் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உயர் அதிகாரிகளிடமிருந்து ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டில் ஒரு தொழிலைத் தொடர முயற்சித்துக்கொண்டிருந்தால், இந்த மாதம் உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடும். தொழில், வியாபாரத்தில் உள்ள நுணுக்கங்கள் புரியவரும். தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் நிறைவேறும்.
சந்திராஷ்டமம் : 22,23,24 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com