சிம்ம ராசி நேயர்களே, இந்த மாதம் புதிய முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். உங்கள் வாக்கு வன்மையால் தன லாபம் உண்டாகும். பண வரவு வெளியில் சொல்லும்படி இருக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும். புதிய பொறுப்புகளும் நவீன பொருள் சேர்க்கையும் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பொது காரியங்களில் அதிகம் ஈடுபாடு உண்டாகும். குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உடன்பிறப்பு வகையில் சுப விரையம் ஏற்படும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிறர் பாராட்டும் செயல்களை செய்ய முடியும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். கடன் பிரச்னைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்லுறவு அதிகரிக்கும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் விரும்பிய இடம் மாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
சந்திராஷ்டமம் : 9,10,11 கவனமாக இருக்க வேண்டிய நாட்கள்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com