துலாம் ராசி அன்பர்களே, இந்த மாத பலன்படி, பல முக்கிய சவால்களையும், விவாதங்களையும் எதிர்கொள்ள வேண்டிவரும். மனதில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். உங்கள் அன்றாட பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழப்பமான சூழ்நிலையில் எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். உடல் மற்றும் மன பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திடீரென ஏற்படும் பெரிய செலவுகள் காரணமாக நிதி நிலைமை பாதிக்கப்படலாம். குடும்பத்தில் வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும். பணவரவு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் சின்ன சின்ன மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும். எதையும் திட்டமிட்டு செயல்படுவது எல்லா வகையிலும் சிறப்பு. நீண்ட நாள் எண்ணங்கள் நிறைவேறும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். அடிக்கடி பயணங்களால் அலைச்சல் ஏற்படும். பிரபலங்களின் அறிமுகவும், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் உபாதைகள் நீங்கும். பெற்றோர்களுடன் மிகுந்த மரியாதையாக நடந்துகொள்ளவும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் நிச்சயம் உண்டு. புது முயற்சிகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் தொடங்க முடியும். எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். வேலையில் இருப்பவர்கள் திடீரென்று தேவையற்ற இடத்திற்கு மாற்றப்படலாம். பயணிக்கும்போது உங்கள் உடல் நலம் மற்றும் உடமைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
சந்திராஷ்டமம் : 5,6,7 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com