மீனம் ராசி நேயர்களே : இது வரை ராசிக்கு 2ம் வீட்டில் இருந்து ராகு பகவான் குடும்பத்தில் சில குழப்பான சூழலை ஏற்படுத்தி இருப்பார். வருகின்ற 08.10.2023 அன்று முதல் ஜென்ம ராசியில் ராகு, களத்திர ஸ்தானத்தில் கேது என கிரக பெயர்ச்சி அக உள்ளது. ஜென்ம ராசியில் அமர்ந்து ஏழாமிடத்து பார்வையால், குடும்பத்தில் ஒரு சில சிக்கல்கள் வரும். கேது பகவான் பாதகமான இடத்தில் அமர்ந்து சந்தோஷத்தில் குறைவையும், எதிரிகளையம் சமாளிக்கும் பொறுப்பை தருவார், புதிய முடிவுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. முன்கோபத்தால் முக்கிய நபர்களின் நட்பை இழக்க நேரிடும். அடுத்தவர் பேச்சை நம்பாமல் சுய சிந்தனையுடன் வாழ்ந்தால் மட்டுமே வளம் பெற முடியும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவி கிடைக்கும். சிறிய தன வருவாயும் நிலைத்து நிற்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். விலையுயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்களுடனான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. பேச்சுக்களில் நிதானமும், பொறுமையும் வேண்டும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் வாழ்வியல் நிலையில் ஒரு சில மாறுதல்களை உண்டாக்கும். ராசியில் ராகு இருப்பதால் மனதில் அநாவசியமான குழப்பம் உண்டாகும். உங்கள் செயல்பாடுகள் அடுத்தவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். உறவினர்களால் ஒரு சில பிரச்சனைகள் வரக்கூடும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் உண்டாகும். நண்பர்கள் உதவியால் பொருளாதார நிலை உயரும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லவும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். பூர்விக சொத்துக்களால் அனுகூல பலன்கள் ஏற்படும். எதிர்பாராத வகையில் சில உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். திருமண தடை நீங்கும். வெளியிடங்களில் தேவையற்ற பிரச்சனைகள் வராமல் இருக்க அமைதி காப்பது நல்லது. நீங்கள் நல்லது செய்யப் போனாலும் அது அடுத்தவர்களின் பார்வைக்கு கெட்டதாகவே தெரியும். இதனால் உங்கள் கடமைகளில் மட்டும் கவனம் செலுத்தி அடுத்தவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது அவசியம். ஜென்ம ராசியில் ராகு இணைவதால் உடலில் சிறு தொந்தரவுகள் வர வாய்ப்பு உள்ளதால் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மனதில் நினைத்ததை எளிதாக அடைய பல எளிய குறுக்கு வழிகளை ராகு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவார். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும்.
ஏழாம் இடத்தில் அமர உள்ள கேதுவினால் நன்மை குறைவாகவே இருக்கும். புதிய அனுபவத்தை பெற முடியும். மறைமுக எதிரிகள் காணாமல் போவர். பிரியமானவர்களுடன் சின்ன சின்ன கருத்து வேறுபாடு தோன்றும். அதிகப்படியான அலைச்சலினால் உடல் அசதி ஏற்படும். குடும்பத்தினரோடு சந்தோசமாக செலவழிக்கும் நேரம் குறையும். ஒரு சிலருக்கு தூரதேசப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. நட்பு மூலம் புதிய அனுபவத்தை பெற முடியும். பலதரப்பட்ட முக்கிய பிரமுகர்களின் தொடர்பு கிட்டும். வாழ்க்கைத்துணையின் எண்ணங்களை புரிந்துகொள்ள முடியும். உடன் பிறந்தோரால் ஒரு சில உபத்திரவங்களை சந்திக்க நேரிடும். பூர்விக சொத்துகளில் சில பிரச்னைகள் வரக்கூடும். புதிய நபர்களை நம்பி எந்த விஷயத்திலும் இறங்கக் வேண்டாம். குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய கட்டாயம் உருவாகலாம். தள்ளி போன சில வைப்புக மீண்டும் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்கு செவி சாய்ப்பது நல்லது.
உத்யோகத்தில் பொறுமையும், நிதானமும் தேவை. உத்யோக இடத்தில் கொடுத்த வேலையை தாமதமின்றி செய்து முடிப்பது நல்லது. வேலையின்றி இருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் நல்ல வேலை கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
குடும்ப விவகாரங்களில் கவனமாக இருக்கவும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். இன்றைய சூழலில் நீங்கள் அதிகம் பேசாமல் அமைதிyaga இருப்பது அதிக நன்மை தரும். ராகு-கேது மட்டுமே சற்று பாதகமான பலன்களை தருகின்ற 1-7-ஆம் இடங்களில் இருக்கின்றது, எனவே ராகு-கேதுவுக்கு முறைப்படி பரிகாரம் செய்வது மிகவும் அவசியம். இந்த பெயர்ச்சி உங்களுக்கு நன்மை, தீமையும் கலந்த கலவையான பலன்களை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831