ராகு கேது பெயர்ச்சி பலன்கள் |
ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் (2023 - 2025) வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம் புரட்டாசி மாதம் 21ம் தேதி (08.10.2023) ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு உதயநிதி நாழிகை 23.50க்கு அதாவது மாலை 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ரசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சோபகிருது வருடம், ஐப்பசி மாதம் 13ம் தேதி (30.10.2023) திங்கட்கிழமை மாலை 04.40 மணியளவில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ரசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆக உள்ளனர். பொதுவாக ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களை தருவார்கள். ராகு கேது பெயர்ச்சி என்பது நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேது தங்கள் ராசியை மாற்றும் கிரக நிகழ்வு ஆகும். எல்லா கிரகங்களும் கடிகார முள் சுற்றும் திசையில் சூழல்கின்றன, அனால் ராகுவும், கேதுவும் எதிர் திசையில் சுற்றி வருகின்றன. ராகுவும் கேதுவும் ஒரே அச்சில் இருப்பதால் ஒன்றுக்கொன்று 180 டிகிரி இடைவெளியில். (ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள்.) எனவே, எந்த ராசியிலும் கேதுவின் சஞ்சாரம் 18 மாதங்கள் அல்லது 1.5 ஆண்டுகள் வரை எந்த ராசியிலும் ராகு சஞ்சரிப்பது போல் நீடிக்கலாம். கேது எப்போதும் ராகுவின் பெயர்ச்சி ஸ்தானத்தில் இருந்து 7 ஆம் வீட்டில் சஞ்சரிப்பார் என்பதை நினைவில் வைக்கவும். குரு மற்றும் சனியைப் போலவே ராகு மற்றும் கேது நீண்ட கோச்சார காலத்தைக் கொண்டுள்ளது. கிரகத்தின் டிரான்சிட் உதவியுடன் நடப்பு நிகழ்வுகளை ஆய்வு செய்து கணிக்கும் ஒருவருக்கு, ராகு கேது பெயர்ச்சி சனியின் பெயர்ச்சி அல்லது வியாழனின் பெயர்ச்சியைப் போலவே முக்கியமானது. ராகு மற்றும் கேது ஒரு குறிப்பிட்ட ராசியிலிருந்து மாறும்போது அது உங்கள் ஜாதகத்தைப் பொறுத்து உங்கள் வாழ்க்கையில் மாறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம். தற்போது ராகு மேஷ ராசியில் இருக்கிறார். கேது துலாம் ராசியில் இருக்கிறார். 08.10.2023 அன்று (ஞாயிற்று கிழமை) பகல் 3.40 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியில் இருந்து கன்னிக்கு இடம் பெயருவார்கள். மேலும் இவர்கள் 26-04-2025 வரை இதே இடத்தில் இருப்பார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசி வாரியாக விரிவாக கணித்து கொடுக்கப்பட்டு உள்ளது. ராகு - கேது கிரகங்களுக்கு உருவம் கிடையாது. பொதுவாக ஜோதிட விதி படி ராகு - கேது 3,6,11 இடத்தில் இருந்தால் நல்ல பலன்களை தருவார். மற்ற இடத்தில் இருந்தால் இருக்கும் இடத்தை பொருத்தும், ராகு-கேது பலத்தை பொருத்தும் நன்மை, தீமையான பலன்களை செய்வார் என்பது ஜோதிட விதி. கோச்சார அடிப்படையில் பலன் பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட கிரகத்தை மட்டும் வைத்து பலன் பார்க்கக்கூடாது. அதன்படி, முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது ஆகியவையின் இருப்பிடத்தைக்கொண்டும் ஆராய்ந்து இங்கே பலன்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கிரகங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் பலவீனமாக இருந்தாலும் கோட்சாரம் என்பது ஒரு அங்கமே, திசாபுத்திகள் சாதகமற்ற நிலையில் இருந்து கோட்சார கிரகங்கள் ஒத்துழைப்பு செய்தால் பெரிய பதிப்புகளில் இருந்து தப்பி விடலாம். விதி என்பது ராசி கட்டம் என்றால் மதி என்பது கோட்சாரம் ஆகும். இங்கே கொடுக்கப்பட்டுள்ளது கோச்சார பலன்களே. இதில் அவரவர் ஜாதத்தில் நடக்கும் நடப்பு திசை, புத்தி சாதகமாக இருக்கும் பட்சத்தில் பலன்கள் மாறலாம். ஆகையால் சரியான பரிகாரம் மூலம் ராகு கேதுவால் வரும் பிரச்சனைகளை குறைத்து வாழ்வில் முன்னேற்றம் அடையாளம். |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831