தனுசு ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் நின்ற சனி பகவான் வரும் 29.03.2025 முதல் 4ம் இடமான சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். சனி தன் 3,7,10 பார்வையாக 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 10ம் இடமான தொழில், ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் உங்களின் ராசியையும் பார்வை இடுகிறார். தனுசு ராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருந்த சனி இம்முறை 4-ம் இடத்திற்கு மாறுகிறார். சனியின் 4-மிட ம் மாற்றம் அர்த்தாஷ்டம சனி என்று சொல்லப்பட்டு நன்மைகள் ஏதும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். இருப்பினும் சனிபகவான் உங்கள் ராசி நாதனுக்கு நண்பர் என்பதால் பெரியளவில் கெடுதல் எதையும் செய்யமாட்டார் என்பது ஒரு ஆறுதலான விஷயம். மேலும் மற்ற கிரக நிலைகளும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்படியால் அர்த்தாஷ்டம சனி அமைப்பு தனுசு ராசிக்கு பெரிய பாதிப்புகளை தர போவதில்லை. புதிய முயற்சிகள் எடுக்கும் முன் யோசித்து செய்யவும். பண வரவு சிறப்பாக இருக்கும் என்பதால் எத்தகைய சிக்கலையும் சுலபமாக சமாளிக்க முடியும். மனதில் குழப்பான எண்ணங்கள் வரும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வாகன பராமரிப்பு செலவு கூடும். உடலில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் அதை சரி செய்ய முடியும். உடல் நலம் சீராகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. வாகனங்கள் மூலம் நிறைய செலவுகள் வரும். யாருக்கும் பணம் தொடர்பாக வாக்குறுதி தர வேண்டாம். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். திருமண முயற்சி சிறிய தடைக்கு பின் கைகூடும். உற்றார், உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். தனவரவு அதிகரிக்கும். உங்கள் நீண்ட ஆசைகளை நிறைவெற்றிகொள்ள சனி பகவான் வழி செய்வார். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருந்து செயலாற்றவும். மனதில் இருந்த கவலைகள் குறையும். விலகி இருந்த உறவினர்கள் மறுபடியும் குடும்பத்தில் வந்து இணைவர். பொருளாதாரமும் செழிக்கும். வெளியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய வண்டி வாகன சேர்க்கை உண்டு. சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பெரியளவில் சாதனைகளை செய்ய முடியும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். பயணங்களால் ஒரு சில நன்மைகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். மனதில் தெம்பு கூடும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனாவசியச் செலவுகள் ஏற்படாமல் சிக்கனமாக இருக்கவும். மறைமுக எதிர்ப்புகளும் குறையும். தேவைக்கேற்ப வருமானம் கிடைக்கும். குடும்பத்துடன் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
உத்யோகத்தில் நல்ல ஒரு முன்னேற்றம் இருக்கும். உத்யோகத்தில் அலுவலகப் பணிகள் சிறப்பாக முடிவடையும். எதிர்பார்த்த வருமானம் உயர்வு கிட்டும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். புதிய தொழில் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அனுகூலமான திருப்பங்களைக் எதிர்பார்க்கலாம். தனுசு ராசிக்கு அர்த்தாஷ்டம சனி நடந்தாலும் பெரியளவில் பாதிப்பை தராது.
பரிகாரம் : சனிக்கிழமையில் ஆஞ்சனேயரை வழிபடுவது சிறப்பான பலனை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831