கன்னி ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் வரும் 29.03.2026 முதல் 7ம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு செல்கிறார். சனி 3,7,10ம் பார்வையாக 9ம் இடத்தையும், 10ம் இடத்தையும், 4ம் இடத்தையும் பார்க்கிறார். இது நாள் வரை 6ம் வீட்டில் அமர்ந்து பல யோகங்கள் பல தந்துருப்பார். மேலும் எண்ணற்ற வருமானங்கள், செல்வங்களை கொடுத்து வந்தார். இனி சனிபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக அமரப்போகிறார். தற்சமயம் மாறி இருக்கின்ற ஏழாமிடம் நல்ல பலன்களை தரக்கூடிய இடமில்லை. சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டச்சனி சிரமங்கள் பெரிதும் இல்லாமல் இரண்டரை வருடங்களை கடந்து விட முடியும் என்பது ஒரு ஆறுதலான விஷயம். குடும்பப் பொறுப்புகளை ஏற்று வெற்றிகரமாக செய்ய முடியும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு உயரும். 7ம் இடத்திற்கு வருகின்ற சனி பகவானால் கணவன் மனைவி கருத்து வேற்றுமை வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் குழப்பம் நீங்கும். உடல் ஆரோக்கிய குறைவு ஏற்படும். ஒரு சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஏழாமிடத்து சனியால் இனம் புரியாத பயம் வந்து நீங்கும். எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மன உறுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பண வரவும், பொருளாதார வரவும் நன்றாகவே இருக்கும். பணத்தை சேமிக்க பார்க்கவும். உடல்நலமும் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். உங்களுடைய ஆலோசனையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்வர். அடிக்கடி உணர்ச்சி வசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். வெளியிடங்களில் நீங்கள் பேசும் போது ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசவும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும். உங்களுக்கான நல்ல நேரம் வரும்வரை பொறுமையாக காத்து இருக்கவும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். சிலருக்கு பயணங்களால் ஆதாயம் உண்டு. பெற்றோர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். உறவினர்களுடன் சுமுக நிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். பிரியமானவர்கள் வழியில் பண விரையம் ஏற்படும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். உங்களை எதிர்த்து நின்றவர்களை ஒதுக்கி வைப்பது நல்லது. புதிய ஆடை, ஆபரண பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் அனாவசியச் செலவுகளை தவிர்த்து சேமிக்க தொடங்கவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் தெளிவு நிலை உண்டாகும். புது நட்பு வட்டாரம் உருவாகி அவர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். இழுபறியில் இருந்த காரியங்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். தான தர்ம காரியங்களில் மனம் ஈடுபாடுகொள்ளும். தெய்வபலம் கூடும். குடும்பத்தில் ஒரு சில மருத்துவச் செலவுகள் வரும். மனசாட்சிக்கு எதிராக எந்த ஒரு காரியத்தை செய்யவும் மனம் ஒப்பாது.
உத்யோக மாற்றத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.உத்யோகத்தில் கொடுத்த வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு தேடிவரும். ஒரு சிலருக்கு வெளியூர் சென்று பணிபுரியும் யோகமும் உண்டு. கூட்டு தொழில், வியாபாரத்தில் கவனமாக இருக்கவும். பொதுவாக பார்க்கும் போது இந்த சனி பெயர்ச்சியில் கன்னி ராசிக்கு மிதமான லாபம் கிடைக்கும்.
பரிகாரம் : திங்கட்கிழமையில் விநாயகரை வழிபடுவது சிறப்பான பலனை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831