கடக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருந்து வந்த சனி பகவான் 29.03.2025 முதல் கடக ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். (சனி பார்வை 3,7,10) சனி 11ம் இடத்தையும், 3ம் இடத்தையும், 6ம் இடத்தையும் பார்க்கிறார். கடக ராசிக்கு அஷ்டம சனி முடிந்து பாக்கிய சனி தொடங்குகிறது. இனி சனி பகவானால் யோகங்கள் அதிகம் கிடைக்கும் என்று தான் சொல்ல வேண்டும். இது வரை இருந்து வந்த எல்லா சாதகமற்ற நிலைகளும் இந்த சனி பெயர்ச்சி மூலம் நீங்க போகிறது. நீங்கள் தொட்ட காரியம் துலங்கும். உங்களுக்கு இனி மேல் தான் எல்லா விதமான நல்ல பலன்களும் கிடைக்க போகிறது. தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். மனதில் புது தெம்பும், உற்சாகமும் பிறக்கும். குடும்ப பிரச்சனைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். இனி உங்களுக்கு ஏற்றமான பலன்கள் தான் கிடைக்கும். குடும்ப செல்வாக்கு உயரும். தெய்வ தரிசனம் கிடைக்கும். குல தெய்வ பிராத்தனையை தவறாமல் நிறைவேற்றவும். பழைய கடன்களை எல்லாம் ஓரளவு அடைத்து விட முடியும். குடும்ப தேவைகள் பெருமளவு பூர்த்தியாகும். வீட்டில் ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். பழைய வீட்டில் இருந்து புது வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பும் உண்டு. எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். மருத்துவ செலவுகள் ஓரளவு குறையும். அசையும், அசையா சொத்துக்களை வாங்க முடியும். தான தர்ம காரியங்கள் ஈடுபடும் வாய்ப்புகள் வரும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும். சனிபகவானின் அருளால் உங்களின் விடாமுயற்சிக்குரிய பலன்கள் கிடைக்கும். உங்கள் நீண்டகால எண்ணங்களும் நிறைவேறும். இழுபறியான விஷயங்களும் முடிவுக்கு வரும். விலகிச் சென்ற நண்பர்களும் திரும்பி வந்து உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவர். உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்கு நீங்கள் முக்கிய காரணமாக இருப்பீர்கள். பொருளாதாரம் நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் கௌரவம் அந்தஸ்து இரண்டும் உயரும். குடும்பத்தில் சுபகாரியங்களால் மகிழ்ச்சி உண்டாகும். செய்தொழிலில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, தியானத்தில் ஈடுபாடு ஏற்படும். யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த வில்லங்கம் நீங்கும். மனப்பிரச்னைகள் குறையும். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பண விஷயத்தை பொறுத்தவரை எந்த பிரச்னையும் இருக்காது. தாராள பணப்புழக்கம் இருக்கும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள் சாதகமான முடிவுக்கு வரும்.
உத்யோகத்தில் நல்ல சம்பளமும் பதவி உயர்வும் கிடைக்கும். உத்யோகம் தொடர்பான வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும். தொழில், வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த மந்த நிலைமை மாறும். தொழில், வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் பெரியளவில் முதலீட்டை தவிர்க்கவும். கடக ராசிக்கு இந்த சனி பெயர்ச்சியில் நிச்சயம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மி வழிபாடு சிறப்பான பலனை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831