கும்ப ராசி நேயர்களே, இதுவரை உங்கள் ராசியில் ஜென்ம சனியாக நின்ற சனி பகவான் வரும் 29.03.2025 முதல் 2ம் இடமான தன ஸ்தானத்திற்கு செல்கிறார். (சனி 3,7,10) சனி தன் 3,7,10ம் பார்வையால் 4ம் இடமான சுக ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 8மது இடமான ஆயுள், வம்பு ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 11ம் இடமான லாப ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். இது ஜென்ம சனியாக இருந்து பல இன்னல்களை கொடுத்து வந்தார், வருகிற சனி பெயர்ச்சிக்கு பிறகு கெடு பலன்கள் பெரியளவில் இருக்காது. இனி உங்கள் வாழ்க்கை ஏறு முகமாக தான் இருக்கும். சனி மாற்றத்தினால் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். உங்களுடைய கெடுபலன்கள் அழிவதால் நீங்கள் நினைத்த விஷயங்கள் எளிதாக பலிதமாகும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் செல்வாக்கு படிப்படியாக உயரும். குலதெய்வ வழிபாடு அவசியம். குடும்ப பிரச்சனைகள் தலைதூக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் சிக்கல் ஏற்படும். மற்றவர்களிடம் வார்த்தைகளை அளந்து பேசவும். பெரியோர்களின் நட்பு கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். அசையாச் சொத்துக்கள் வாங்க, கடன் தொல்லைகள் பெரும்பாலும் குறையும். உற்றார், உறவினர்களிடம் சுமுக உறவு இருக்காது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். எதிரிகளிடம் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகமாக இருக்கும். இக்கட்டான தருணங்களில் உங்கள் அனுபவ அறிவை வெளிப்படுத்தவும். சமூகத்தில் உயர்ந்தவர்களிடம் நட்பு கிடைக்கும். பொருளாதாரம் உயரும். வசதி வாய்ப்புகள் பெருகும். உடன்பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். மனதில் நம்பிக்கை வளரும். எவருடனும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். அலைபாயும் மனதை கட்டுப்படுத்த தியானம் செய்யவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கும். பூர்வீகச்சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் மறைந்து நன்மைகள் வரத் தொடங்கும். முக்கியமான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் அனைத்தும் சீராக இருக்கும். ஆழ்ந்த சிந்தனையும், ஆன்மீகத்தில் நாட்டமும் உண்டாகும். எதிர்காலத்தில் நடப்பதை முன்னரே அறிந்துகொள்ளும் சக்தி இருக்கும்.
உத்யோக மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். உங்களின் வேலைகளை சக ஊழியர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மேலதிகாரிகளின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படவும். மேலதிகாரிகளின் ஆதரவை பெற முடியும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொதுவாக பார்க்கும் போது இந்த பெயர்ச்சி முன்பு போல் இல்லாமல் நிறைய மாற்றங்கள் நடைபெற கூடியதாக இருக்கும்.
பரிகாரம் : வியாழக்கிழமையில் விரதமிருந்து குரு பகவானை வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831