மகர ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 2ம் இடத்தில் நின்ற சனி பகவான் வரும் 29.03.2025 முதல் 3ம் இடமான சகாய ஸ்தானத்திற்கு மாறுகிறார். சனி தன் 3,7,10 பார்வையாக 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 12ம் இடமான அயன, சயன, விரைய ஸ்தானத்தையும் பார்வை இடுகிறார். கடந்த ஏழரை ஆண்டுகாலமாக சனி மகர ராசிக்கு பல தொந்தரவுகளை கொடுத்து வந்தார். அனால் இந்த சனி பெயர்ச்சியில் உங்கள் நிலைமை அப்படியே தலை கீழாக மாறும். நீங்கள் தொட்ட காரியம் துலங்கும். உங்கள் நெருக்கடிகள், பிரச்சனைகள் அனைத்தும் விலகும். முக்கிய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வாழ்க்கையில் இதுவரை என்ன பாக்கியம் கிடைக்காமல் இருக்கிறதோ அது இனிமேல் கிடைக்கும், வராத பணம் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உங்கள் உடலும், மனமும் புத்துணர்ச்சி பெரும். மனதில் இருந்த குழப்ப நிலை நீங்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். புதிதாக சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. குடும்ப முன்னேற்றத்திற்கு வழி கிடைக்கும். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. பயணங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நல பாதிப்புகள் பெரும்பாலும் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். குடும்ப வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். ஆன்மிக வழிபாட்டில் நாட்டம் செல்லும். உயர்ந்தோர்களின் நட்பு கிடைத்து சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும். ஏற்கனவே வாங்கிய பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விட முடியும். உங்கள் கையில் பணம் புரள ஆரம்பிக்கும். விருந்து, விழா, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். உடன்பிறந்தோரும் அனுசரணையாக இருப்பர். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் இது வரை தடைப்பட்டு கொண்டிருந்த நல்ல காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவர். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு.
உத்யோகத்தில் சகஜமான சூழ்நிலை இருக்கும். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார். புது தொழில் தொடங்கும் யோகம் உண்டு. மேலும் தொழில் தொடங்குவது குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எந்த வகையில் பார்த்தாலும் இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மை தரக்கூடியதாக இருக்கும்.
பரிகாரம் : முருகரை மனதார வணங்கி வழிபட சிறப்பான பலன் கிடைக்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831