மீன ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 12ல் நின்ற சனி 29.03.2025 முதல் உங்கள் ஜென்ம ராசிக்கு மாறுகிறார், அதாவது குருவின் வீடான மீன ராசிக்கு வருகிறார். (சனி பார்வை 3,7,10) சனி 3ம் பார்வையாக 3ம் இடமான முயற்சி ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 7ம் இடமான களத்திர ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 10ம் இடமான தொழில், ஸ்தானத்தையும் பார்க்கிறார். உங்கள் ராசிக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் பெரியளவில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் கடும் முயற்சிக்கு பின்னர் தான் செய்ய முடியும். மேலும் முக்கிய விஷயங்களை சரியான முறையில் திட்டமிட்டு செய்யவும். குடும்பத்திற்கு தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். பல நாட்களாக புரியாமல் இருந்த விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல ஒரு ஒற்றுமை நிலவும். வீண் வாக்குவாதங்கள் எவரிடமும் வேண்டாம். நண்பர்களும் இப்போது விரோதிகளாவர் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். உடல் உபாதைகள் ஏதேனும் இப்போது தெரிந்தால் குடும்ப மருத்துவரிடம் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளவும், உழைப்பால் முன்னேற முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். வெளிநாட்டு பயணங்கள் சாதகமாக அமையும். உடன்பிறப்புகளுக்கு நன்மை செய்ய முடியும். கடன் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் எண்ணம் வரும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. குடும்ப பொறுப்பு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு காதல் கைகூடி திருமணத்தில் முடியும். இறுக்கமான மனநிலை காணப்படும். குடும்ப பெருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனம் யோகா, தியானத்தில் ஈடுபாடு கொள்ளும்.
உத்யோக இடத்தில் மன நிம்மதியை தருவார். உத்யோகத்தில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் சேர்த்து தன நிலையில் உயர்வும் ஏற்படும். உத்யோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். நீங்கள் திட்டமிட்டபடி சிறிய முதலீட்டில் புது தொழில் ஒன்றை தொடங்க முடியும். தொழிலில் நல்ல முன்னேற்ற சூழ்நிலை ஏற்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி சுமாரான பலன்களை தரும்.
பரிகாரம் : சாஸ்தாவை வணங்கி வழிபட நற்பலன்கள் கிடைக்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831