மேஷ ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் நின்று பல நல்ல பலன்களை தந்த சனி பகவான் வரும் 29.03.2025 முதல் 12ம் இடமான அயன, சயன விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார். (சனி பார்வை 3,7,10) தன் 3ம் பார்வையால் 2ம் இடமான தன ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தையும், 10ம் பார்வையாக 9ம் இடமான பாக்யஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். உங்களுக்கு ஏழரை சனி தொடங்க இருக்கிறது. மேலும் சனி உங்கள் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. ஏழரை சனி என்பது வாழ்க்கைக்கு தேவையான அனுபவங்களை கற்று தருகின்ற ஒரு அமைப்பு. இந்த கால கட்டத்தில் பணத்தை கையில் வைத்திருக்காமல் அதை சொத்துகளாக வாங்குவது, மாற்றுவது சிறப்பு. அதை போல் சனி பல விபரீத ராஜயோகத்தையும் தர போகிறார். சேமித்த பணத்தை செலவு பண்ணும் காலம் இது. உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு தெரிவிக்கும். பணத்தை பத்திரமான முறையில் சேமித்து வைக்கவும், அல்லது சொத்துக்கள் வாங்கி முதலீடு செய்வதோ நல்லது. இல்லையெனில் தேவையற்ற வீண் செலவுகள் செய்ய வேண்டிவரும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உறவினர்களுடன் கவனமாக இருப்பது நல்லது. எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். குடும்பத்தாருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வரும் பாக்கியம் கிட்டும். பூர்விகச் சொத்துக்கள் மூலம் பணம் வரும். உழைப்பால் உயர்வு நிலை உண்டு, மனதில் நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடந்துவிடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். உடல் உபாதைகள் நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். போட்டி பொறாமைகளை சாதுர்யமாகச் சமாளிக்க முடியும். உங்களை நம்பி வந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் வரும். உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது சிறப்பு. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பர். அதேநேரம் யாரையும் நம்பாமல் தனித்துச் செயல்படுவது நல்லது. வழக்கு விவகாரங்கள் இழுபறி நிலையில் நீடிக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும். நெருங்கியவர்களே உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புள்ளதால் அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவும்.
வெளிநாட்டில் வேலை முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்யோகத்தில் விரும்பிய பதவி உயர்வும், ஊதிய உயர்வு இரண்டும் கிட்டும். மேலதிகாரிகள் உங்கள் செயல்களைப் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். தொழில், வியாபாரத்தில் வருமானம் கூடும். இந்த சனி பெயர்ச்சியில் ஏழரை தொடங்குவதால் எதிலும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம் ; வியாழக்கிழமையில் சித்தர்கள் வழிபாடு சிறப்பான பலனை தரும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831