மிதுன ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் 29.03.2025 முதல் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்கள் ராசிக்கு 10ல் அமரும் சனி தன் 3ம் பார்வையால் 12ம் இடமான அயன, சயன, விரைய ஸ்தானத்தையும், 4ம் இடமான சுக ஸ்தானத்தையும், 10ம் பார்வையாக 7ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் வீடான தொழில் ஸ்தானத்தில் அமரப்போவதால் உங்களுக்கு எல்லா வகையிலும் நன்மை கிடைக்க போகிறது. மனதில் நினைத்திருந்த காரியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக நடந்தாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மனதில் இருந்த சஞ்சலங்களும், விரக்தியும் நீங்கும். இது வரை தொடர்ந்து வந்த பிரச்னைகள் நீங்கும். புதிதாக வீடு, மனை வாங்க முடியும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீங்கள் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். சமுதாயத்தில் புதிய அந்தஸ்தைப் பெற முடியும். குடும்ப வருமானம் உயரத் தொடங்கும். உங்களின் வங்கி கணக்கும் வெகுவாக உயரும். வெளியில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போகவும். உங்களது பல நல்ல செயல்களால் அனைவரது பாராட்டும் கிடைக்கும். இழந்த பொருள், செல்வாக்கை மீண்டும் பெற முடியும். குடும்ப பெரியோர்களின் ஆசியும், தெய்வ தரிசனமும் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பான முறையில் இருக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உங்களுக்குத் தேவையான உதவிகள் தேவையான சமயத்தில் கிடைக்கும். மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். உங்கள் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் வந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவது உறுதி. எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதற்காக அதிகமாக உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களுக்கு எதிராக இருந்த உறவினர்கள் கூட இப்போது அன்பு பாராட்டுவர். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆலய வழிபாடு, மன அமைதியை தரும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பெற்றோர்களை அனுசரித்து அவர்ககளின் நலனில் அக்கறைகொள்ளவும். எதிலும் சிந்தித்து உங்கள் செயல்களைத் திறம்படச் செய்து முடிக்கும் காலகட்டமாக இது இருக்கும்.
உத்யோகத்தில் புது தெம்பும், உற்சாகமும் பிறக்கும். உத்யோகத்தில் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக செய்ய முடியும். உத்யோகத்தில் வருமானம் கணிசமாக உயரும். ஒரு சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் உண்டாகும். சக ஊழியர்களை அனுசரித்து போகவும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக இந்த சனி பெயர்ச்சி மிதுன ராசிக்கு எதிர்கால முன்னேற்றத்திற்கு வழி செய்து கொடுக்கும்.
பரிகாரம் : சனிக்கிழமையில் சிவ வழிபாடு நல்ல பலனை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831