ரிஷப ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 10ம் இடமான கர்மா ஸ்தானத்தில் நின்று பல நல்ல விஷயங்களை செய்து வந்த சனி பகவான் 29.03.2025 முதல் 11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார், (சனி பார்வை 3,7,10) சனி பகவான் தன் 3ம் பார்வையால் உங்கள் ராசியை பார்க்கிறார், 7ம் பார்வையால் 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், 10ம் பார்வையால் 8ம் இடமான ஆயுள், வம்பு, வழக்கு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமருவது ஒரு மிக பெரிய யோகம். மேலும் சனிபகவான் பார்வை உங்க ராசியில் விழுவதும் கூடுதல் பலம். இந்த சனி பெயர்ச்சி முதல் மேன்மையான பலன்களை தர இருக்கிறார். இது நாள் வரை இருந்து வந்த கவலைகள், குழப்பங்கள், உடல் நலக்குறைவு, கடன் தொல்லைகள், எதிர்மறை எண்ணங்கள், அதிர்ஷ்ட குறைவு , தடைகள் தாமதங்கள் போன்ற அனைத்தும் தீர போகிறது. நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணத்தை சேமிக்கும் எண்ணம் வரும். எதிர்பாராத பண வரவுக்கு நிறைய வாய்ப்புண்டு. புது, வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை நிலவும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து இணைவர். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பூர்விக சொத்து பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் செல்வாக்கு உயரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. வரும் எதிர்ப்புகளை எதிர்கொள்ள முடியும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களும் லாபகரமாகவே இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நெடுநாட்களாக வாட்டிக் கொண்டிருந்த உடல் உபாதைகளிலிருந்து விடுதலை கிடைக்கும். சமூகத்தில் உங்கள் பெயர், புகழ், செல்வாக்கு கூடும். உங்கள் திறமைகள் வெளிப்படும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பூர்வீகச் சொத்துகளை வாங்கும் யோகம் உண்டு. புது புது திட்டங்களை தீட்டி அதை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். தொல்லை கொடுத்து வந்த நண்பர்கள் தாங்களாகவே விலகி ஒதுங்கிவிடுவர். குடும்பத்திலிருந்த சண்டை, சச்சரவுகளும் நீங்கும். உற்றார், உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தர முடியும். அதே நேரம் உங்கள் வருமானத்திற்குத் மீறிய செலவுகள் வரும். பொது ஜன தொடர்பு அதிகரிக்கும். வெளிநாட்டில் குடியேறும் வாய்ப்புகளும் சிலருக்கு ஏற்படும். நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது மற்றவர்களையும் கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது.
உத்யோக பணிகள் விரைவில் முடிவடையும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவும் தொடர்ந்து கிடைப்பதால் தொழில் ரீதியான பயணங்களால் நிறைய நன்மைகள் உண்டு. கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். செய்தொழிலை விரிவுபடுத்த வங்கிகளிடமிருந்து கடன்கள் கிடைக்கும். செய்து வரும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். இந்த இரண்டரை வருட சனி பெயர்ச்சி காலம் மிகவும் யோகமானதாக இருக்கும்.
பரிகாரம் : சனி பிரதோஷ வழிபாடு சிறப்பான பலனை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831