சிம்ம ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் கண்டச்சனியாக இருந்த சனி பகவான் 29.03.2025 முதல் உங்கள் ராசிக்கு 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்ல போகிறார். சனி பகவான் தன் 3,7,10ம் பார்வையாக 10 இடத்தையும், 2ம் இடத்தையும், 5ம் இடத்தையும் பார்க்கிறார். இதுநாள் வரை கண்டச்சனியாக இருந்து கஷ்டங்களைக் கொடுத்தார் இனி எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக அமரப்போகிறார். இந்த கால கட்டத்தில் சில பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் அவை உங்களுக்கு சாதகமாகவே முடியும். உங்கள் ராசிக்கு நல்லதும், கெட்டதும் கலந்தே நடக்கும். பண விஷயத்தில் புது நபர்கள் யாரையும் நம்ப வேண்டாம். பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். குடும்ப விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக கையாளவும். ஆடம்பர செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழல் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க தாமதமாகும். நீங்கள் வெளியில் கொடுத்த பணம் கைக்கு சரியான நேரத்தில் வராது. கணவன் மனைவி உறவில் இருவரும் அனுசரித்து போவது நல்லதும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உதவியாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். ஆன்மிகத்தில் அதிக நம்பிக்கை உண்டாகும். உழைப்பு கூடினாலும் அதற்கேற்ற வருமானம் கிடைக்கும். பழைய கடன்களையும் அடைக்க முடியும். பகைவர்களால் இருந்து வந்த தொல்லைகள் இப்போது இருக்காது. சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புது வீடு, நிலம் போன்றவற்றை வாங்கும் போது நன்கு விசாரித்து வாங்கவும், ஏன் எனில் அதில் ஒரு சில வில்லங்கம் வர வாய்ப்புள்ளது. உடன்பிறப்பு வகையில் எந்த ஒரு உதவியும் எதிர்பார்க்க வேண்டாம். குடும்ப பெரியோர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. கொடுத்தவாக்கை காப்பாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நல்ல பலனளிக்கும். குடும்பத்தில் தவிர்க்க முடியாத மருத்துவ செலவுகள் வரும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். வெளியில் அனாவசிய பேச்சை தவிர்க்கவும். எந்த ஒரு காரியத்தையும் ஒரு சில சிரமத்திற்கு பின்னரே முடிக்க முடியும். பணவரவுக்கு எந்தக் குறையும் உண்டாகாது. வெளியில் கொடுத்த பணம் கைக்கு திரும்ப வரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சமூகத்தில் உங்கள் பெயர் செல்வாக்கு உயரும். புதிய வாய்ப்புகளால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
உத்யோகத்தில் சில மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். மேலதிகாரிகள் உங்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பர், அதனால் அவர்களின் ஆதரவு தொடரும். மேலும் உத்யோகத்தில் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் இருந்தாலும், வருமானம் ஓரளவு சுமாராகவே இருக்கும். இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு அஷ்டம சனியாக வருவதால் புது முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம் : சனிக்கிழமையில் நரசிம்மர் வழிபாடு சிறப்பான பலனை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831