துலாம் ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் வரும் 29.03.2026 முதல் 6ம் இடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு சென்று ஆட்சிபலம் பெற போகிறார். சனி தன் 3,7,10ம் பார்வையாக 8 இடத்தையும், 12ம் இடத்தையும், 3ம் இடத்தையும் பார்க்கிறார். சனி பகவான் உங்கள் ராசிக்கு 6ம் வீட்டில் அமர்ந்து யோகத்தை தரப்போகிறார். இந்த சனி மாற்றத்தினால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற அனைத்தும் நீங்கி ஒரு சிறப்பான பலன்களை தரப்போகிறது. எடுத்த காரியங்களை சிரமமின்றி முடிக்க முடியும். பழைய கடன்கள் முழுதும் அடைப்படும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். செல்வமும் செல்வாக்கும் கூடும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க வேண்டிவரும். இந்த சனி பெயர்ச்சி காலம் முழுவதும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்துடன் சென்று குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். உடன்பிறப்புகளால் சில நன்மைகள் உண்டு. உங்கள் வேலைகளை திட்டமிட்டதுபோல் சரியாக செய்ய முடியும். ஆன்மீக பெரியோர்களின் ஆசியும் கிட்டும். உடல் உபாதைகள் நீங்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் குறையும். உங்களின் செயல்திறன் கூடும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பர். உங்கள் பேச்சுக்கு அனைவரும் மதிப்பு கொடுப்பர். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அவசர முடிவுகளால் சிறு பண விரயங்களும் உண்டாகும். வீட்டு பராமரிப்பு செலவு அதிகமாகும். எவ்வளவு சிக்கலான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும் அதில் இருந்து மீண்டு வெளியில் வர முடியும். அவசரப்பட்டு யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். கையில் பணம் புரள ஆரம்பிக்கும். புதிய வங்கி கணக்கை ஒன்று தொடங்கி அதில் சேமிக்கவும் முடியும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தேடிவரும். உங்களின் முயற்சிகள் எளிதில் வெற்றியடையும். குடும்பத்துடன் விருந்து, விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியும். உற்றார், உறவினர்களுடன் சுமுகமாகப் பேசி பழகுவதால் அவர்களின் அன்பை பெற முடியும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு புது வீடு மாறும் யோகம் உண்டாகும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக முடியும். உங்களின் தன்னம்பிக்கை உயரும். உங்கள் மனதில் இருந்த குழப்பங்கள் மறைந்து தெளிவு பிறக்கும்.
உத்யோகத்தில் எதிர்பார்த்த எல்லா சலுகைகளும் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரவாக இருப்பார். தொழில், வியாபாரம் தொடர்பாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டிவரும். புது தொழில் தொடங்குவது தொடர்பான ஆலோசனையும், பண உதவியும் கிடைக்கும். துலாம் ராசிகாரர்கள் இன்னும் இரண்டரை ஆண்டு காலத்திற்கு யோகமான பலன்களை அடைய போகின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்.
பரிகாரம் : குலதெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831