விருச்சிக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 4ம் இடமான சுக ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் வரும் 29.03.2025 முதல் 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்கிறார். சனி தன் 3,7,10 7ம் இடத்தையும், 11ம் இடமான லாப ஸ்தானத்தையும், 2-ம் இடமான தன ஸ்தானத்தையும் பார்க்கிறார். இது வரை பல கஷ்டங்களையும், உடல் ரீதியான தொந்தரவுகளையும், இன்னல்களையும் சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் நன்மை அடைய போகும் ராசிகளில் விருச்சிக ராசியும் ஒன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் மூலம் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் வெளியில் வலம் வர முடியும். எனவே கெடு பலன்கள் நீங்க போகிறது என்ற வகையில் இந்த பெயர்ச்சி ஒரு மகத்தான மாற்றத்தை சொந்த வாழ்க்கையில் உங்களுக்கு கொடுத்து வாழ்வில் முன்னேற்றதினை தர இருக்கிறது. நீண்ட நாட்களாக நினைத்து இருந்த காரியம் இப்போது நிறைவேறும். மன அழுத்தங்கள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். கணவன் மனைவி உறவு நன்றாகவே இருக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவர். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் வரும். இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. பணவரவு அதிகமாகவே இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரம் மேன்மையடையும். உடன் இருந்த நண்பர்களால் சிலரால் சில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டிவரும். ஆன்மீக பெரியோர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற வழி கிடைக்கும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்ற முடியும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும். கடந்த காலங்களில் சுக ஸ்தானத்தில் இருந்த சனியால் ஆரோக்கிய குறைவு, உடல் நல தொந்தரவுகளை சந்தித்து இருப்பீர்கள். இப்போது கடவுள் அருளால் உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். வங்கியில் எதிர்பார்த்த வாகனக்கடன், வீடு வாங்கக் கடன் போன்றவைகள் கிடைக்கும். உங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய வண்டி வாகனம் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்து சேர்க்கைக்கு நிறைய வாய்ப்புண்டு. பெற்றோர்களுக்கும் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டிவரும். திருமணம் போன்ற சுபகாரியங்களில் இருந்து வந்த தடை விலகிவிடும். பொதுச்சேவையில் மனம் ஈடுபாடுகொள்ளும்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வேலை பளு குறைந்து காணப்படும். மேலும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு இரண்டும் தக்க நேரத்தில் கிடைக்கும். இது வரை வேலை கிடைக்காமல் அவதி பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். செய்தொழிலில் புதிய நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும். மேலும் செய்தொழில் மேன்மை நிலை உண்டு. தொழில், வியாபாரம் சிறக்கும். பொதுவாக பார்க்கும் போது விருச்சிக ராசிக்கு எதிர்காலத்திற்கு தேவையானதை செய்து கொள்ளும் வாய்ப்புகள் வரும்.
பரிகாரம் : சனிக்கிழமையில் சிவ பெருமானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831