சனி பெயர்ச்சி பலன்கள் |
(சனி பெயர்ச்சி 2025 - 2028 - குரோதி வருடம் பங்குனி 15ம் தேதி, மார்ச் 29, 2025) சனி பகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி இரவு 9.44 மணிக்கு கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி 3ம் பாதத்தில் இருந்து மீன ராசியில் உள்ள பூரட்டாதி 4ம் பாதத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். மீன ராசி வழியாகப் பெயர்ச்சி பிப்ரவரி 22, 2028 அன்று மாலை 7:14 மணிக்கு முடிவடையும். இதன் காரணமாக மீன ராசிக்கு ஜென்ம சனியும், கும்ப ராசிக்கு பாத சனியும், மேஷ ராசிக்கு ஏழரை சனி தொடக்கமான விரய சனியும் தொடங்க உள்ளது. (திருநள்ளாறில் நடைபெறும் சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையாக கொண்டது.) பன்னிரண்டு ராசிக்காரர்களுக்கும், சனி பகவானால் உண்டாகக்கூடிய எல்லாவிதமான பலன்களையும் இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. சனி பகவான், கோச்சார ரீதியாக கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போதும், வக்கிர கதிக்கு ஆளாகும் போதும் சில ராசியினருக்கு சங்கடங்கள் உண்டாகலாம். பொதுவாக ஜாதகரின் ராசிக்கு 12ம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது அவருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஜென்ம ராசியிலும். அதன் பிறகு 2-ம் வீட்டிலும் சனி பகவான் இருக்கும் வரை ஏழரை சனியின் முதல் சுற்று நடைபெறும், ஜாதகருக்கு சோதனையை ஏற்படுத்தி மங்கு சனியாக விளங்கும் சனிபகவான், இரண்டாம் சுற்றின் போது பொங்கு சனியாக மாறி வழங்குகிறார். இந்த சனிப்பெயர்ச்சி கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியில் இருந்து விடுதலை கிடைக்கிறது. 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களையும் தனித்தனியாக பார்க்கலாம். சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார். குரு ஓராண்டு காலம், ராகு - கேது ஒன்னரை ஆண்டு காலம் சஞ்சரிப்பார்கள். நவகிரகங்களில் ஒரு கிரகம் ஒரு ராசியில் அதிக காலம் சஞ்சரிக்கக்கூடியது சனி கிரகம் என்பதோடு, அவர் கர்ம காரகன், நீதிபதி போன்று செயல்படுவதால், சனி பெயர்ச்சி என்றதும் தன் ராசிக்கான பலன்கள் அறிய அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். ஜனன ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் அமைய பெற்றவர்களுக்கும், தசாபுத்திகள் நல்ல நிலையில் உள்ளவர்களுக்கும் தற்போதைய சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏதும் வராது. அனைத்து ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சின் போது அருகிலுள்ள ஆலயத்திற்கு சென்று சனி பகவானை வணங்கி வரவேண்டும். திருநள்ளாறு சென்று சனிஈஸ்வரரை வழிபட்டு வரலாம். 12 ராசிகளும் சனிப்பெயர்ச்சி விவரங்களும் (2025 - 2028) இந்த சனி பெயர்ச்சியால், ரிஷபம், மிதுனம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகாரர்களுக்கு மிகுந்த நன்மைகளும், கடக, கன்னி, விருச்சிகம், தனுசு ஆகிய ராசிகளுக்கு சம பலன்களும், மேஷ, சிம்மம், கும்பம், மீனம், ஆகிய ராசிக்காரர்களுக்கு சற்று கெடுதலான பலன்கள் நடைபெறப்போகிறன்றன. ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology), செல் : 9003019831 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831