சனி பெயர்ச்சி பலன்கள் |
(சுபகிருது வருடம் தை மாதம் 3ஆம் தேதி, ஜனவரி 17, 2023) திருக்கணித முறைப்படி சனிபகவான் ஜனவரி மாதம் 17ம் தேதி மாலை 06.04மணிக்கு மகராசி அவிட்டம் 2ம் பாதத்தில் இருந்து கும்ப ராசியான அவிட்டம் 3ம் பாதத்துக்கு பெயர்ச்சியாகிறார். அதே சனி பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின் படி வரும் சுபகிருது வருடம் பங்குனி மாதம் 15ம் தேதி (29 மார்ச் 2023) புதன் கிழமை ஆண்டு பகல் 1.07மணிக்கு மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனி பகவான், கோச்சார ரீதியாக கும்ப ராசியில் சஞ்சரிக்கும் போது, வக்கிர கதிக்கு ஆளாகும் போதும் சில ராசியினருக்கு சங்கடங்கள் உண்டாகலாம். பொதுவாக, கிரகங்கினாள் சங்கடங்கள் உண்டாகும் போது முறையான பரிகாரங்களை மேற்கொள்வதும் மூலமாக மட்டுமே வரும் கெடு பலன்களை குறைத்து நல்ல பலன்களை பெற முடியும். பொதுவாக ஜாதகரின் ராசிக்கு 12ம் வீட்டில் சனி சஞ்சரிக்கும் போது அவருக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. அங்கிருந்து ஜென்ம ராசியிலும். அதன் பிறகு 2-ம் வீட்டிலும் சனி பகவான் இருக்கும் வரை ஏழரை சனியின் முதல் சுற்று நடைபெறும், ஜாதகருக்கு சோதனையை ஏற்படுத்தி மங்கு சனியாக விளங்கும் சனிபகவான், இரண்டாம் சுற்றின் போது பொங்கு சனியாக மாறி வழங்குகிறார். ஜனன ஜாதகத்தில் சனி பகவான் தசாபுக்தி காலத்திலும், ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டகச் சனி, அர்தாஷ்டமச்சனி போன்ற கோச்சார காலங்களிலும் சனிபகவான் அவருடைய கர்மா வினைகளுக்கு ஏற்ப பலன்களை தருவார். மேலும் சனி பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் அமைய பெற்றவர்களுக்கும் தற்போதைய சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏதும் வராது. கோச்சார பலன் என்பது போது பலன்களாகும். பொது பலன்களை கண்டு அச்சப்பட தேவையில்லை. சுய ஜாதக அமைப்பும் திசாபுக்திகளுமே ஒரு மனிதனை இயக்கும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அனைத்து ராசிக்காரர்களும் சனிப்பெயர்ச்சின் போது அருகிலுள்ள அழைத்திற்கு சென்று சனி பகவானை வணங்கி வரவேண்டும். திருநள்ளாறு சென்று சனி ஈஸ்வரரை வழிபட்டு வரலாம். (அல்லது) சனி பகவானின் ஸ்தலங்களான திருக்கொள்ளிக்காடு, குச்சனுர் ஆகிய ஊர்களில் எழுந்தருளியுள்ள சனீஸர பகவான் ஆலயத்தை நாடி சென்று பரிகாரம் செய்வது நன்மை அளிக்கும். சனி பகவான் கர்மகாரகன் என்பதால் முன்னோர்களை வணங்குவது, இறந்து போன முன்யோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்வது அமாவாசை தினத்தன்று வீட்டில் படையலிட்டு பித்ரூக்களை வணங்குவது கூட ஒரு பரிகாரம் ஆகும். உங்கள் சக்திக்கு முடிந்த பரிகாரத்தை சனி பகவானுக்கு செய்வதை போதுமானது. 12 ராசிகளும் சனிப்பெயர்ச்சி விவரங்களும் (2023 - 2026) இந்த சனி பெயர்ச்சியால், மேஷம், கன்னி, தனுசு ஆகிய மூன்று ராசிகாரர்களுக்கு மிகுந்த நன்மைகளும், ரிஷபம், மிதுனம், துலாம் ஆகிய ரசிகர்களுக்கு சம பலன்களும், கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கெடுதலான பலன்களை நடைபெறப்போகிறன்றன. சனி காயத்ரி மந்திரம் ஓம் காக த்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology), செல் : 9003019831 |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831