கன்னி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் அமர்ந்து இருந்த சனி பகவான் சுமாரான பலனை கொடுத்து இருப்பார், அதனால் பெரியளவில் நன்மை கிடைக்காமல் போய் இருக்கும். கடந்த காலங்களில், தொழில், நஷ்டம், பண இழப்பு, வீண் பகை, திருமண தடை என பல சங்கடங்கள் சனி பகவான் கொடுத்து இருப்பார். தன் 3,7,10 பார்வையால் 7ம் இடத்தையும், 11ம் இடமான லாப ஸ்தானத்தையும், 2-ம் இடமான தன ஸ்தானத்தையும் பார்க்கிறார். . சனி பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து யோகத்தை தரப்போகிறார். இந்த சனி மாற்றத்தினால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த குழப்பங்கள், கடன் தொல்லைகள் போன்ற அனைத்தும் நீங்கி ஒரு சிறப்பான பலன்களை தரப்போகிறது. எடுத்த காரியங்களை சிரமமின்றி முடிக்க முடியும். பழைய கடன்கள் முழுதும் அடைப்படும். அசையும், அசையா சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. திடீர் அதிர்ஷ்டங்கள் அமையும். செல்வமும் செல்வாக்கும் கூடும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்க வேண்டிவரும். இந்த சனி பெயர்ச்சி காலம் முழுவதும் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். இது வரை பல கஷ்டங்களையும், உடல் ரீதியான தொந்தரவுகளையும், இன்னல்களையும் சந்தித்த உங்களுக்கு துன்பங்களில் இருந்த விடிவுகாலம் பிறக்கப்போகிறது. இந்த சனி பெயர்ச்சியால் நன்மை அடைய போகும் ராசிகளில் கன்னி ராசியும் ஒன்றாக இருக்கும். இந்த பெயர்ச்சியின் மூலம் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். நீங்கள் புத்துணர்ச்சியுடன் வெளியில் வலம் வர முடியும். நீண்ட நாட்களாக நினைத்து இருந்த காரியம் இப்போது நிறைவேறும். மன அழுத்தங்கள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உடன்பிறந்தவர்கள் உதவுவர். வீடு, நிலம், மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டு. இந்த சனி பெயர்ச்சி பல நன்மைகளையும் யோகங்களையும் தரப்போகிறது. குடும்பத்தில் சந்தோஷமான சம்பவங்கள் நடைபெறும். பொருளாதாரம் மேன்மையடையும். உடன் இருந்த நண்பர்களால் சிலரால் சில ஏமாற்றங்களை சந்திக்க வேண்டிவரும். ஆன்மீக பெரியோர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெற வழி கிடைக்கும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை எப்பாடு பட்டாவது காப்பாற்ற முடியும். குடும்பத்தில் தடைப்பட்டிருந்த திருமணம் கைகூடும். குழந்தை இல்லாத குடும்பத்தில் குழந்தைகள் பிறக்கும். திருமணத்தில் இருந்து வந்த தடை விலகிவிடும. இப்போது கடவுள் அருளால் உடல் உபாதைகள் அனைத்தும் நீங்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். வழக்குகளிலும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். வங்கியில் எதிர்பார்த்த வாகனக்கடன், வீடு வாங்கக் கடன் போன்றவைகள் கிடைக்கும். உபொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். புதிய வண்டி வாகனம் யோகம் உண்டு. பூர்வீகச் சொத்து சேர்க்கைக்கு நிறைய வாய்ப்புண்டு. ங்கள் விருப்பங்கள் அனைத்தும் பூர்த்தியாகும். பொதுச்சேவையில் மனம் ஈடுபாடுகொள்ளும். பண சேமிப்புகள் உண்டாகும். பழைய கடன்கள் அடைப்படும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். கணவன் மனைவி உறவு பலப்படும். மனஸ்தாபங்களால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் வாழ்வர். மருத்துவ செலவுகள், விரைய செலவுகள் ஓரளவு குறையும். வெளிநாடு சென்று வரும் யோகமும் அமையும். சனிபகவான் 6ல் சஞ்சரிக்கக்கூடிய இந்த நேரத்தில் ஆண்டுகோள் என சொல்லப்படும் குரு வரும் 22.4.2023 வரை 7ம் வீட்டிலும், 1.5.2024 முதல் 14.5.2025 வரை பாக்கிய ஸ்தானமான 9ம் வீட்டிலும் அமர்ந்து பொருளாதார நிலையை மேலும் வலுப்படுத்துவார். சர்ப கிரகங்களான ராகு, கேது சாதகமற்று சஞ்சரிப்பதால் குறிப்பாக வரும் 30.10.2023 வரை ஜென்ம ராசியில் கேது, 7ல் ராகுவும் சஞ்சரிப்பது நெருங்கிய வட்டாரங்களிடம் கருத்து வேறுபாடு வரும், ஆகையால் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடிப்பது முக்கியம்.
உத்யோகத்தில் எதிர்பார்த்த லோன் கிடைக்கும். உத்யோகத்தில் வருமானம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் பாராட்டும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். சகஊழியர்களின் ஆதரவு நல்ல விதமாக இருக்கும். தொழில், வியபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் அமையும். தொழில் போட்டிகள் நீங்கும் எதிர்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தை நல்ல விதமாக விரிவாக்கம் செய்ய முடியும்.
பரிகாரம் : தயிர் சாதத்தில், எள் கலந்து, பெருமாள் கோயிலில் மதிய வேளையில் தானம் செய்வது நல்லது.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831