கும்ப ராசி நேயர்களே, இது வரை கும்ப ராசிக்கு ஏழரை சனியில் விரைய சனியாக இருந்து வந்த சனி பகவான் தற்போது ராசியிலேயே ஜென்ம சனியாக அமர்கிறார். உங்கள் ராசிக்கு இரண்டரை ஆண்டு காலம் ஜென்மசனி தொடங்குகிறது. சனி பகவான் தன்னுடைய ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் பெரியளவில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஜென்ம சனி மன அழுத்தம், தடுமாற்றங்களை தருவார். வீண் கோபங்களால் மன விரோதங்கள் உண்டாகும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படும். எந்த விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒரு விஷயத்தை பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். நீங்கள் செய்யும் எந்த ஒரு செயலும் கடும் முயற்சிக்கு பின்னர் தான் செய்ய முடியும். மேலும் முக்கிய விஷயங்களை நிதானமாகவும் திட்டமிடும் செய்யவும். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். (சனி பார்வை 3,7,10) தன் 3ம் பார்வையால் 3ம் இடமான தைரிய ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் 7ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் 10ம் பார்வையாக 10ம் இடமான கர்ம ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். குடும்ப உறவுகளிடம் அனுசரணையாக இருக்கவும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். குடும்பத்தாருடன் புனிதத் தலங்களுக்குச் சென்று வரும் பாக்கியம் கிட்டும். பூர்விகச் சொத்துக்கள் மூலம் பணம் வரும். உழைப்பால் உயர்வு நிலை உண்டு, மனதில் நடக்காது என்று நினைத்திருந்த காரியங்கள் திடீரென்று நடந்துவிடும். கடன் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும். உடல் உபாதைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும். அதிக அலைச்சல் காரணமாக உடல் அசதியும், சோர்வும் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வதும், எதிலும் பொறுமையோடு செயல்படுவதும் நல்லது. உணவு விஷயங்களில் கட்டுப்பாடு அவசியம். போட்டி பொறாமைகளை சாதுர்யமாகச் சமாளிக்க முடியும். உங்களை நம்பி வந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருவீர்கள். சிலர் புதிய வீட்டிற்கு மாற வேண்டிய சூழல் வரும். உறவினர்களுடன் கவனமாக பேசி பழகுவது சிறப்பு. அதேநேரம் யாரையும் நம்பாமல் தனித்துச் செயல்படுவது நல்லது. உடன்பிறப்புகளால் ஆதாயம் இல்லை. வழக்கு விவகாரங்கள் இழுபறி நிலையில் நீடிக்கும். மறைமுக எதிரிகளின் தொல்லை இருக்கும். அனைத்து விஷயங்களிலும் கவனமாக இருக்கவும். அக்கம் பக்கத்தாரிடம் அனுசரித்து செல்ல வேண்டாம். குடும்பத்தில் சுப காரியங்கள் தள்ளி போகும். கணவன் மனைவிடையே தேவையற்ற கருத்துவேறுபாடுகள் வரும். உற்றார், உறவினர்களால் மனநிம்மதி குறையும். வரவுக்கு மீறிய செலவுகளால் உங்களுடைய கையிருப்பு குறையும். கடன்கள் அதிகரிக்காமல் இருக்க எதிலும் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பது நல்லது. வெளியில் கொடுத்த பணத்தை வாங்குவது சிரமம் இருக்கும். ஆண்டுகோள் என சொல்லக்கூடிய குருபகவான் 22.4.2023 வரை 2ல் சஞ்சரிக்கக்கூடிய காலம் மட்டுமேஉங்களுக்கு சாதகமான நேரமாகும். ஜென்ம சனி நடக்கும் இக்காலத்தில் ஏப்ரல் 2023க்கு பிறகு குரு 3,4ம் வீடுகளில் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. நீழல் கிரகமான ராகு வரும் 30.10.2023 வரை சஞ்சரிப்பது உங்களுக்கு சாதகமான அமைப்பாகும். இதன் காரணமாக ஒரு சில விஷயங்களில் எதிர்நீச்சல் போட வேண்டிவரும். 2023க்கு பிறகு 2ல் ராகு, 8ல் கேது சஞ்சரிக்க இருப்பதால் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருப்பதும், பிறர் விவகாரத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.
உத்யோகத்தில் ஏற்பட்ட இடமாற்றத்தினால் வெளியூருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடும். வேலையில் எதை செய்வது, எதை விடுவது என்ற குழப்பம் வரும். உத்யோகத்தில் மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவது சற்று சிரமாகவே இருக்கும். உடன் பணிபுரியும் பெண் ஊழியர்களிடம் எச்சரிக்கையாக பழகவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகள் எதையும் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் முடங்கும் வாய்ப்புண்டு.
பரிகாரம் : ஞாயிற்றுக் கிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவதால் உங்களின் நம்பிக்கையும், முயற்சியும் அதிகரிக்கும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831