Sani Peyarchi Palan

Sani Peyarchi Palan

    MESHAM Sani Peyarchi Palan

மேஷ ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கர்ம, ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் இனி 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சென்று ஆதாயத்தை தர போகிறார். சனி பகவான் லாப ஸ்தானத்தில் அமருவது ஒரு மிக பெரிய அதிர்ஷ்டம். சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகளில் உங்கள் ராசியும் ஒன்று. கடந்த கால கசப்பான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். கடந்த இரண்டரை ஆண்டுகள் வருமானத்தில் சிக்கல், குடும்பத்தில் பிரச்சனை, உடலில் கேடு, மனதில் துயரம், கண்டம், என்று பல விதமாக அவஸ்தைப்பட்ட மேஷ ராசியினருக்கு 17.01.2023 முதல் பிரகாசமான காலம் தான். உங்கள் ராசிக்கு 11ல் அமரும் சனி தன் 3ம் பார்வையால் 1ம் இடமான ராசியையும் 4ம் இடமான சுக ஸ்தானத்தையும், 10ம் பார்வையாக 8ம் இடமான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார். உங்களுக்கு திடீர் வருமானம் உண்டாகும். மனம் உற்சாகமடையும். புது தெம்பு பிறக்கும். எதையும் சாதிக்கும் எண்ணங்கள் மனதில் தோன்றும். சனிபகவான் பார்வை உங்க ராசியின் மீது விழுவதும் கூடுதல் பலம். வெளியூர் பயணம் செல்லும் யோகம் வந்து சேரும். இது நாள் வரை இருந்து வந்த கவலைகள், குழப்பங்கள், உடல் நலக்குறைவு, கடன் தொல்லைகள், எதிர்மறை எண்ணங்கள், அதிர்ஷ்ட குறைவு , தடைகள் தாமதங்கள் போன்ற அனைத்தும் தீர போகிறது. நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணத்தை சேமிக்கும் எண்ணம் வரும். எதிர்பாராத பண வரவுக்கு நிறைய வாய்ப்புண்டு. கௌரவமும், செல்வாக்கு தேடி வரும். புது, வீடு, மனை வாங்கும் யோகம் அமையும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக நடந்தாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மனதில் இருந்த சஞ்சலங்களும், விரக்தியும் நீங்கும். இது வரை தொடர்ந்து வந்த பிரச்னைகள் நீங்கும். புதிதாக வீடு, மனை வாங்க முடியும். திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். நீங்கள் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். சமுதாயத்தில் புதிய அந்தஸ்தைப் பெற முடியும். குடும்ப வருமானம் உயரத் தொடங்கும். உங்களின் வங்கி கணக்கும் வெகுவாக உயரும். வெளியில் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போகவும். உங்களது பல நல்ல செயல்களால் அனைவரது பாராட்டும் கிடைக்கும். இழந்த பொருள், செல்வாக்கை மீண்டும் பெற முடியும். குடும்ப பெரியோர்களின் ஆசியும், தெய்வ தரிசனமும் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பான முறையில் இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உங்களுக்குத் தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உங்கள் செயல்களில் சிறு சிறு இடையூறுகள் வந்தாலும் இறுதியில் வெற்றி பெறுவது உறுதி. எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதற்காக அதிகமாக உழைக்க வேண்டி வரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்களிடம் விரோதமாக இருந்த உறவினர்கள் கூட இப்போது அன்பு பாராட்டுவர். குடும்பத்தில் சுபச்செலவுகள் ஏற்படும். ஆலய வழிபாடு, மன அமைதியை தரும். மற்றவர்களிடம் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். பெற்றோர்களை அனுசரித்து அவர்ககளின் நலனில் அக்கறைகொள்ளவும். இழுபறியில் இருந்த வழக்குகள் வாபஸ் ஆகும். பழைய கடன் கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். கடன் சுமைகள் குறையும். மருத்துவ விரைய செலவுகள் கட்டுக்குள் வரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமையும், அன்யோன்யமும் பிறக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். திடீர் பயணங்கள் மகிழ்ச்சியை தரும். புது சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. சனி பகவான் சாதகமாக சஞ்சரிக்கும் இக்காலத்தில் ஆண்டுகோள் என சொல்லப்படும் குரு பகவான் 1.5.2024 முதல் 14.5.2025 வரை தான ஸ்தானமான 2ம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கக்கூடிய காலமானது மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். பூர்விக சொத்து வகையில் அனுகூலங்கள் போன்றவை ஏற்படும். நிழல் கிரகமான கேது உங்கள் ராசிக்கு 6ல் வரும் 30.10.2023 முதல் 18.05.2025 வரை சஞ்சரிக்கும் காலத்தில் மேலும் சிறப்பான பலன்களை அடைவதற்கான வாய்ப்புகளும் உங்களுக்கு உண்டு. எப்படி பார்த்தாலும் 11ம் வீடு லாபஸ்தானம் என்பதாலும் இந்த இடத்திற்கு பெயர்ச்சியாகும் சனிபகவான் ஒருவருக்கு மறைமுக வருமானம், ஒன்றும் மேற்பட்ட வருமானம் கிடைக்கவும் நிறைய வாய்ப்புண்டு.

உத்யோகத்தில் அனைத்து வேலைகளையும் திருப்திகரமாக செய்ய முடியும். புதிய தொழில் தொடங்க வாய்ப்புகள் வரும். ஏற்கனவே செய்து வந்த பழைய தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும். உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபமும், அபரிமிதமான வருமானமும் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். கிடைக்கக்கூடிய வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை உண்டாகும். மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி பெயரும், புகழும், செல்வமும் வாங்கி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

பரிகாரம் : பிள்ளையார் பட்டி சென்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்

( For Mesham : Daily - Weekly - Monthly)
( General Predictions Given Below. )


General Predictions - Mesham (Aries) [Stars : Ashwini 1,2,3,4 Barani 1,2,3,4 Kirthigai 1 quarters]

Mesham is the first and raising rasi house among the twelve rasis in the vedic horoscope chart. People who are born in the mesha rasi always think higher, broad minded and have speedy approach in all the aspects. Spontaneity, action-orientation, courageousness, driving ability, innovation & open minded are the best qualities. They are able to take up higher positions in business, job, social services, politics and other related activities. Though these mesha rasi people are bit aggressive, they are kind and very helpful to others whoever believes and approaches them. Basically fear to god and fight for the best are naturally cultivated in their mind. Then and there if any show stoppers in life, easily they could cross the barrier with will power. Always sun shines for mesha rasi as the owner of rasi is Mars and heats up everything for continuous improvement.

They get excellent opportunities from the community, political and the government if they intend to serve better. Some people may reach higher levels in education to be honoured like doctorate or scientist. Most of the time, no one can influence these people with any trick as they are able to find and crackdown anything with intuition power. Many under this sign would like to travel for goals or to reach target. Naturally brave hearted people. Also if Mars with Saturn are strong sometimes they become doctors. Many are sports personalities. Always maintains neat and clean policy in everything. May live around 85 to 90 years if maintains good health. These people are usually vigorous and possess a strong constitution and also have incredible powers of speedy recovery. Looks straight forward and open minded; sometimes become world famous. Lucky colours are red and white, stones are ruby and diamond, and numbers are 6 & 9.


Astrology Predictions Written By : " Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology). Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831

 


Please Note : The predictions given above is based on common astrological data. Kindly consult with astrologer for your own specific predictions based on date of birth, time of birth and place of birth.