விருச்சிக ராசி நேயர்களே, இது வரை உங்கள் ராசிக்கு 3ம் இடத்தில் இருந்து சுப பலன்களை தந்து கொண்டு இருந்த சனி பகவான் இனி சனி பகவான் உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் அர்த்தாஷ்டம சனியாக அமர போகிறார். அர்த்தாஷ்டம சனி என்பது அஷ்டமத்து சனியின் பாதியளவு ஆகும், ஆகையால் இக்கால கட்டத்தில், நீங்கள் நன்மையை எதிர்ப்பாக முடியாது. உங்கள் ஜனன ஜாதகத்தில் நல்ல திசாபுக்திகள் நடைபெற்றால் மட்டுமே, இந்த பாதிப்புகளிலிருந்து மீள முடியும். சனி பகவான் 3,7,10 பார்வையால் கடன், பகை, நோய் ஸ்தானம் என்கிற 6ம் இடத்தையும், தொழில் ஸ்தானம் ஆன 10ம் இடத்தையும் பார்வை செய்கிறார். உங்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. பயணங்கள் வெற்றியை கொடுக்கும். உடல் நல பாதிப்புகள் பெரும்பாலும் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார். குடும்ப வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். ஆன்மிக வழிபாட்டில் நாட்டம் செல்லும். உயர்ந்தோர்களின் நட்பு கிடைத்து சமுதாயத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். நண்பர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும். ஏற்கனவே வாங்கிய பழைய கடன்களையும் திருப்பி அடைத்து விட முடியும். உங்கள் கையில் பணம் புரள ஆரம்பிக்கும். விருந்து, விழா, நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல விருப்பம் ஏற்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. உடன்பிறந்தோரும் அனுசரணையாக இருப்பர். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய முயற்சிகள் பலிதமாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் இது வரை தடைப்பட்டு கொண்டிருந்த நல்ல காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவன் மனைவி இருவரும் ஒன்று சேருவர். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். வரும் நாட்களில் அர்த்தாஷ்டம சனி நடைபெற இருப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டாலும் இக்காலங்களில் 22.4.2023 முடிய குரு பஞ்சம ஸ்தானமான 5லும் 1.5.2024 முதல் 14.5.2025 வரை சமசப்தம ஸ்தானமான 7லும் சஞ்சாரம் செய்ய இருப்பது உங்களுக்கு மிகவும் அனுகூலமான அமைப்பாகும். இந்த தருணத்தில் வரும் 30.10.2023 முடிய ராகு 6லும், அதன் பின்னர் வரும் 30.10.2023 முதல் 18.05.2025 வரை கேது 11லும் சஞ்சாரம் செய்ய உள்ள அமைப்பானது மிகவும் அற்புதமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம், எதிர்பாராத உதவிகள் உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள், உற்றார், உறவினர்களின் ஆதரவால் உங்களின் தேவைகள் பூர்த்தியக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்களின் தனி திறமையால் எதையும் சமாளிக்க முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்த்தால் வீண் அலைச்சலை குறைத்துக்கொள்ள முடியும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் சற்று சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது. சுற்றி இருப்பவர்களிடம் பேசும்போது சிந்தித்து பேசுவது நல்லது. அதிகப்படியான செலவுகள் காரணமாக கையில் இருக்கும் சேமிப்பு குறையும், அதனால் கடன் வாங்கும் சூழ்நிலை கூட வரலாம். ஆடம்பர செலவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வது நல்லது. சில நேரங்களில் உடனிருப்பவர்கள் செய்யும் செயல்களால் மன உளைச்சல் ஏற்படும். பெரிய தொகைகளை கையாளும் போது கவனத்தோடு ஈடுபடுவது நல்லது.
உத்யோகத்தில் உடல் ஆரோக்கிய பிரச்சனைகளால் அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டிவரும். சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் நெருக்கடிகளால் வேலை மாறுவதோ, அல்லது விட்டு விடுவதோ பற்றிய யோசனை வரும். தொழில், வியாபாரத்திற்காக அடிக்கடி கடன் வாங்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமை இருக்கும். தொழில் முடக்கம் ஏற்படும். நிறைய செலவு செய்து வியாபாரத்தை நடத்த வேண்டிவரும்.
பரிகாரம் : வீட்டில் விளக்கேற்றி லலிதா சகஸ்ர நாமம் பாடி அம்பாளை வழிபடுவதும். அஷ்டமி விரதமிருந்து பைரவரை வழிபடுவதும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831