தனுசு ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் ஒரு ராசியில் அதிக நாட்கள் தங்கும் கிரகமான சனிபகவான் இவ்வாண்டு உங்கள் ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால், உங்களுக்கு ஏழரைச்சனியில் பாதசசனி நடைபெறுவதால் எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மேலும் குரு பகவான் 3-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாள் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும். அலைச்சல், உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். உங்கள் மதிப்பு மரியாதையை உயர்த்திக்கொள்ள இந்த ஆண்டு வழி பிறக்கும். நீங்கள் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு ஜெயித்து காட்ட முடியும். இனி வரும் காலங்கள் சாதகமாகவே இருக்கும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷத்தையும் தரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நல்ல புரிதல் இருக்கும். நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும். உங்கள் பேச்சில் வசீகரமும் முகத்தில் பொலிவும் காணப்படும். நீண்ட நாட்களாகத் தள்ளி வைத்திருந்த பயணங்கள் கைகூடும். உங்கள் காரியங்களை தன்னம்பிக்கையுடன் செய்ய முடியும். உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவைகள் நீங்கப் பெறுவர்.குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உற்றார், உறவினர்களுக்கு நன்மைகளும் நலன்களும் உண்டாகும். பூர்வீகச் சொத்துகளில் வருமானம் கிடைக்கும்.குடும்பத்தி உங்கள் கௌரவம் உயருகின்ற வகையில் சம்பவங்கள் நிகழும். நல்ல வாய்ப்புகள் வரும்போதே அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும். அவசரப்பட்டு செய்ய நினைக்கும் காரியங்கள் சில நேரங்களில் சிரமத்தில் முடியும். பயணங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். நண்பர்கள் மூலமாக நிறைய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள முடியும். பொருளாதாரம் உயரும். எதிர்பாராத நபர்களிடமிருந்து பெரியளவில் ஆதரவு கிடைக்கும். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வை காண முடியும். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவர். கடன் பிரச்சனையை ஓரளவு சமாளிக்க முடியும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனையின்படி நடப்பது நன்மை தரும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். சாட்சி கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். சொத்து வழக்கில் எதிர்பார்த்த தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பணிச் சுமை கூடும். உத்யோகத்தில் சாதகமான சூழல் நிலவும். தொழில், வியாபாரத்தில் சில இடர்பாடுகள் வந்து போகும். தொழில், வியாபாரத்தில் இருந்த ஏற்ற தாழ்வுகள் நீங்கும். இந்த வருடம் உங்கள் ராசிக்குரிய எளிய பரிகாரங்கள் செய்து வந்தால் நலம் மிக்க ஆண்டாக அமையும். எதையும் திட்டமிட்டபடி உங்கள் பணிகளை செய்தால் இந்த ஆண்டு பெரியளவில் வெற்றிகளை குவிக்கலாம்.
பரிகாரம் : வியாழக்கிழமையில் சித்தர்கள் வழிபாடு சிறப்பான பலனை தரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022 மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831