கன்னி ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகங்களான குரு பகவான் 6-ம் வீட்டிலும், சனி பகவான் 5-ம் வீட்டிலும் சஞ்சரித்துள்ளதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எதிலும் சிறப்பாக செயல்பட்டு படிப்படியான முன்னேற்றங்களை அடைய முடியும். இந்த புத்தாண்டு சாதகமான பலனை தரும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் நாளடைவில் நடந்து விடும். மனோபலம் கூடும். நெருக்கடியான பிரச்னைகள் நீங்கும். பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். குடும்ப சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுக்க முடியும். குடும்ப வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களும் வசூலாகும். யோகா, தியானத்தில் மனம் ஈடுபடுகொள்ளும். சமூகத்தில் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வெளிப்படையாகப் பேசுவதை தவிர்க்கவும். பெற்றோர் உடல் நிலையில் கவனம் தேவை. குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஓரளவிற்கு வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்தவும். பிரியமானவர்களால் குறிப்பிடத்தகுந்த ஆதாயத்தினைக் பெற முடியும். சொத்துப் பிரச்னைகள், விவகாரங்கள் சாதகமாக இருக்கும். புதிய மனிதர்களை நம்பி பெரிய காரியங்கள் எதிலும் இறங்க வேண்டாம். பயணத்தின் போது மிகுந்த கவனத்துடன் இருக்கவும். நண்பர்கள் வகையில் பல நன்மைகள் கிடைக்கும். புது வங்கி கணக்கு ஒன்றை தொடங்க முடியும். நண்பர்கள் தேடி வந்து உதவி செய்வர். தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். முன்னோர்கள் வழியில் இருந்த சொத்து பிரச்சனை தீரும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டு. வெளிநாடு சென்று வரும் பாக்கியம் கிட்டும். மனதில் தேவையில்லாத விஷயங்களை போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தையை அளந்து பேசவும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். உறவினர்களிடம் மனஸ்தாபம் வர வாய்ப்புள்ளது. எப்போதும் சம்பந்தமில்லாத விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டாம். முக்கிய காரியங்களில் ஏதேனும் தடை ஏற்பட்டால் தெய்வ வழிபாட்டின் மூலம் அதை சரி செய்து கொள்ளவும். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏதும் வராமல் பார்த்துக்கொள்ளவும். கொடுக்கல் வாங்கலில் சிக்கலான சூழ்நிலையே காணப்படும். உத்யோகத்தில் இருந்த சிக்கல் நீங்கும். உத்யோகத்தில் ஏற்றமான விஷயங்கள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது நபர்களை சந்திக்க நேரிடும். உங்கள் கடுமையான உழைப்பால் இந்த புத்தாண்டில் பல சாதனைகளை படைக்க முடியும்.
பரிகாரம்: திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்கி வழிபடவம்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831