கடக ராசி நேயர்களே, இந்த 2022ம் வருடம் முக்கிய கிரகமான குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படுவது அவசியம். மேலும் ஒரு ராசியில் அதிக நாட்கள் தாங்கும் கிரகமான சனி பகவான் உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் நெருக்கமானவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப நபர்களிடம் அனுசரித்து போகவும். பெரிய பெரிய காரியங்களை கூட சர்வ சாதாரணமாக செய்ய முடியும். மனதில் நினைத்த காரியம் ஒரு சில தடங்கலுக்கு பின் கைகூடும். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். நினைத்தது கைகூடும். உங்களை தவறாக புரிந்து கொண்டிருந்தவர்கள் உங்களை நாடி நட்பு கொள்வர்.சமூகத்தில் அதிகமான செல்வாக்கு உண்டாகும். வெளிநாட்டிலிருந்து நற்செய்தி ஒன்று வந்து சேரும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை, வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்கும் போகங்களும் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்ள முடியும். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் இணைவர். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப் போய் பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். பொருளாதார நிலைமை நல்ல நிலையில் இருந்து வரும். குடும்பப் பொறுப்புகளை இழுத்துப்போட்டுக் கொண்டு பார்க்க வேண்டிவரும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். பிரியமானவர்களுக்கு உதவுவதில் மிகுந்த அக்கறை ஏற்படும். உங்களுடைய எண்ணங்களிலும், சிந்தனைகளிலும் அதிகப்படியான பொறுப்புணர்ச்சி வெளிப்படும். எதிர்பார்த்த தொகை சரியான நேரத்தில் கைக்கு வரும். பழைய கடன் முழுவதும் அடைப்படும். பொருளாதாரத்தில் முன்னேற்ற சூழ்நிலை உண்டு. நண்பர்களால் நிறைய நன்மைகளை பெற முடியும். உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். புதிதாக கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம், அப்படி கடன் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க முடியும். பண விரயங்கள் கூட சுப விரயங்களாக மட்டும் இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். பூர்விக சொத்துக்கள் மூலம் பலன் கிடைக்கும். திருமண சம்பந்தமான பேச்சுக்கள் தொடரும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். உறவினர்கள் மூலம் சிக்கலும், பண விரயமும் ஏற்படும். புதிய வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பர். பெற்றோர்களால் நன்மைகள் உண்டாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எப்போதும் நிதானத்துடன் செயல்படவும். சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் பாராட்டுவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எப்படி பார்த்தாலும் நல்ல யோகமான பலன்கள் இந்த ஆண்டு கிடைக்கும் என்பதில் சந்தேகமும் கொள்ள தேவையில்லை.
பரிகாரம் : பெண் தெய்வ வழிபாடு சிறப்பான பலனை கொடுக்கும்.
முக்கிய குறிப்பு : இந்த 2022ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831