MESHAM Yearly Rasi Palan
மேஷ ராசி நேயர்களே, இந்த 2023ம் ஆண்டில் உங்களுடைய எல்லா பிரச்சனைகளும் முற்றிலுமாக அகலும். முக்கிய காரியங்கள் அனைத்தும் காலதாமதமின்றி நடக்கும். ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் குரு 12ம் வீட்டிற்கு வந்து செலவுகளை அதிகரிக்க செய்வார். ஆன்மீக விஷயங்களில் உங்களை சுறுசுறுப்புடன் செயல்பட வைப்பார். பிரியமானவர்களுக்கு எல்லா வகையான மகிழ்ச்சியை கொடுக்க முடியும். 2023 ஜனவரி 17 ஆம் தேதி, சனி உங்கள் 10ம் வீட்டில் இருந்து 11ம் வீட்டிற்கு நுழைகிறார் அதிலிருந்து உங்கள் பொருளாதார முன்னேற்றம் தொடங்கும். ஏப்ரல் 22க்குப் பிறகு 1ம் வீட்டில் குரு பெயர்ச்சி செய்வதும் உங்களுக்கு நல்ல பலன்களை தர உள்ளார். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இந்த வருடம், நல்ல விஷயங்கள் அதிகமாகவே நடக்கும். மனதில் தோன்றும் பல எண்ணங்களை நல்ல விதமாக செயல்படுத்த முடியும். எப்போதும் அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் பார்க்கவும். பணம் பல வழிகளில் வந்து சேரும். புதிய பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புது மன தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். சுய முயற்சியால் வாழ்வில் முன்னேற்றம் அடைய முடியும். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். இது வரை தடைப்பட்டு வந்த காரியங்களை மீண்டும் செய்ய தொடங்கவும். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும், தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் உண்டு. பெற்றோர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்துகொள்ளவும். உடன் பிறப்புகளிடம் விட்டுக்கொடுத்து போகவும். உடன்பிறப்பு வகையில் ஒற்றுமை மேலோங்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சுப செலவுகள் அதிகளவில் ஏற்படும். உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள புது வழியை தேடிக்கொள்ளவும். குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். உடல் நலனில் அதிக கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வந்து சேரும். மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். சொந்தவீடு கனவு சீக்கிரத்தில் நனவாகும். நிலுவையில் இருந்து வரும் சொத்துப்பிரச்சினைகள் முடிவிற்கு வரும். உறவினர்களை கைக்குள் போட்டுக்கொண்டு உங்கள் காரியத்தை சாதித்துக்கொள்ளவும். பெற்றோரின் உடல்நிலையிலும், மனநிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இக்கட்டான சூழலில் பெண்களால் ஆதாயம் பெற முடியும். உத்யோகத்தில் பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். உத்யோகத்தில் நல்ல வரவேற்பு இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும். இந்த புத்தாண்டு உங்களுக்கு எல்லா வகையிலும் நற்பலன்கள் அள்ளித்தரும்.
குறிப்பு : இந்த 2023ல் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831