மிதுன ராசி நேயர்களே, முக்கிய கிரகங்களின் நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவ்வளவு சாதகமாக இல்லை என்பதைக் குறிக்கிறது. பொருளாதார ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சனி உங்கள் 8ம் வீட்டில் இருப்பதால் பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால் இந்த ஆண்டு உங்களின் பிரச்சனைகளை நீக்கும் ஆண்டாக அமையும். மனதில் புதிய உற்சாகம் ஏற்படும். ஏனெனில் ஜனவரி 17 ஆம் தேதி சனி உங்கள் 8ம் வீட்டில் இருந்து 9ம் வீட்டிற்கு இடம் மாறி உங்கள் அதிர்ஷ்டத்தை பலமாக்கும். இதனால் உங்கள் வாழ்வில் வரும் தடைகள் நீங்கி உடல்நலக் குறைபாடுகள் குறைவதோடு பொருளாதார ரீதியாகவும் வளம் பெற முடியும். ஏப்ரல் 22 ஆம் தேதி உங்கள் 11ம் வீட்டில் குரு பெயர்ச்சிப்பது உங்களுக்கு பொருளாதார வளத்தை அளிக்கும். பணம் விவகாரங்களில் நீங்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது, இல்லையெனில் பின்னர் வருந்த வேண்டியிருக்கும். அக்டோபர் 30-ம் தேதி ராகு 10ம் வீட்டில் பெயர்ச்சியால் சில மாற்றங்கள் நிகழும் மற்றும் உங்கள் நிதி நிலை சீராக இருக்கும். இந்த 2023ம் ஆண்டில் எதையும் தைரியத்தோடு செய்யும் துணிவு ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைக்கவும். மனதில் ஒரு வித பயம் இருக்கும், இருப்பினும் பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. உங்களது அன்றாட பணிகளை காலம் தாழ்த்தாமல் செய்து முடிக்கவும். எதையும் சாமர்த்தியமாக சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வீண் கோபத்தை குறைப்பதால் பல வகையில் நன்மை உண்டு. அடுத்தவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பொருளாதார நிலை எதிர்பார்த்தது போல் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்கு பல முறை சிந்தித்து செயல்படவும். அடுத்தவர்களின் ஆலோசனையை விட, சுயமாகவே யோசித்து முடிவு எடுப்பது பல இடங்களில் வெற்றியை தேடி தரும். ஆன்மீக பணிகளுக்காக பணம் நிறைய செலவாகும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். குடும்ப ரகசியங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பயணத்தின் போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன தொந்தரவுகள் வரலாம். எதிர்பாராத மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. நீங்கள் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ முடியும். சொந்தமாக வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் வேறு வீட்டிற்கு மாறி செல்வர். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கல் முடியும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போகவும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சொத்து விவகாரங்களில் சிக்கல்கள் வர வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்கவும். நண்பர்கள் மூலம் ஆதாயம் வந்து சேரும். கடன் பிரச்சனை ஓரளவு தீரும். குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க வேண்டிவரும். தெய்வ வழிபாடு மூலம் நல்வழி கிடைக்கும். உங்கள் தேவைகள் நாளடைவில் பூர்த்தியாகும். வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் இதுவரை தடைபட்டுவந்த காரியங்கள் இனிதே நடைபெறும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும். புதிய வேலைக்கு மாறுவது தொடர்பான யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதலே நல்ல பலன்கள் கிடைக்கும்.
குறிப்பு : இந்த 2023ல் ஒவ்வொரு மாதமும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831