இனிய ஆங்கில புத்தாண்டு 2024-ல் அடி எடுத்து வைக்கும் கடக ராசி அன்பர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த 2024ஆண்டு ஆரம்பம் முதற்கொண்டே உங்களுக்கு அஷ்டம சனியின் தாக்கம் இருக்கும். இந்த ஆண்டு அஷ்டமத்துச்சனி அலைச்சலையும், அதிக விரயத்தையும் ஏற்படுத்தும். கட்டுக்கடங்காத செலவுகளைக் கொடுத்து உங்களை திணற வைக்கும். உங்களுக்கு அலைச்சலை ஏற்படுத்தினாலும் ஆதாயத்தைக் கொடுக்கும். இந்த ஆண்டு அஷ்டம சனி மற்றும் குருவின் சாதகமற்ற நிலையுடன் தொடங்குகிறது. நீங்கள் மன அழுத்த சூழ்நிலையில் இருக்கலாம். உங்கள் 3ம் வீட்டில் இருக்கும் கேது நல்ல அதிர்ஷ்டத்தை தரக்கூடியது என்பது நல்ல செய்தி. ராகு உங்கள் 9 ஆம் வீட்டில் விஷயங்களை சிக்கலாக்கும். ஏப்ரல் 30, 2024 வரை சோதனைக் கால கட்டம் தான். பதற்றம், வேலை அழுத்தம் மற்றும் ஏமாற்றங்களை அனுபவிக்கா வேண்டிவரும். ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பிரியமானவர்களுடன் உங்கள் உறவு பாதிக்கப்படும். உங்கள் பணியிடத்தில் விஷயங்கள் சரியாக நடக்காமல் போகலாம். உங்கள் நிதி நிலைமை பாதிக்கப்படும். தொழில், வியாபாரத்தில் நிதிப் பிரச்சனைகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும். நீங்கள் பல பிரச்சனைகளை கடந்து செல்லும் போது, நீங்கள் நல்ல ஆன்மீக அறிவைப் பெற முடியும். மே 01, 2024 முதல் குரு உங்களின் 11வது வீடான லாப ஸ்தானத்தில் நுழைவதால் சிறப்பாக செயல்பட முடியும். உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் பணியிடத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியும். புதிய வீடு வாங்குவதற்கும், வீடு மாறுவதற்கும் நல்ல நேரம். தவிர்க்க முடியாத சனி பகவானால் குறிப்பிடத்தக்க மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படும். ஒட்டுமொத்தமாக, ஏப்ரல் 30, 2024 வரையிலான முதல் 4 மாதங்களில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த படுகிறது. மே 01, 2024 முதல் நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்பட முடியும். சோதனைக் கட்டத்தைக் கடந்து செல்வது முக்கியம். உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க பகவானை பிரார்த்தனை செய்யவும். இந்த ஆண்டு உங்களின் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்து அதிகரிக்கும். நிச்சயமாக, உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும், ஆனால் அதே நேரத்தில், உங்கள் பொறுப்புகளும் அதிகரிக்கும். இதன் காரணமாக, உங்கள் வாழ்க்கையில் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கும். 2024 ஆண்டு உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இந்த ஆண்டு சூதாட்டம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க வேண்டும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து பேசவும் ஆண்டின் பிற்பகுதியில், உங்களுக்கு உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் இருக்கலாம். இருப்பினும், உங்கள் சமூக அந்தஸ்து அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. தெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்தினால் வரும் துயரங்கள் ஓரளவாவது குறையும். 2024ஆம் ஆண்டில் சவால்களை அதிகளவில் சமாளிக்க வேண்டியிருக்கும். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம்.
பரிகாரம் : நரசிம்மரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்…
முக்கிய குறிப்பு : இந்த 2024-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831