2025 தமிழ் ஆண்டு ராசி பலன்கள் |
2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 ஆம் ஆண்டு பன்னிரெண்டு (12) ராசிக்கான பலனில் இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் அனைத்தும் பொது பலன்களே. அவரவர் ஜாதகத்தில் நடைபெறும் தசாபுத்தியை பொறுத்து நன்மை, தீமையான பலன்கள் கூடலாம் அல்லது குறையலாம்.2025-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு பலன்கள் ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2025 வரையிலான 12 மாதங்களுக்கும் அந்தந்த மாதங்களுக்குரிய தலைப்பில் மேஷராசியினர் முதல் மீனராசியினர் வரை பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. புது வருடம் 2025 தொடக்கம் : 2025 புத்தாண்டு செவ்வாய்க்கிழமை இரவு, புதன் அதிகாலை, மார்கழி 17ம் நாள் பிரதமை திதி, பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, கன்னி லக்கினத்தில் உதயமாகிறது. புத்தாண்டு பலன்களானது அந்த ஆண்டில் நிலவக்கூடிய கிரகங்களின் பெயர்ச்சி, கிரக சேர்க்கைகள் அடிப்படையிலானது. அதிலும் 2025 புத்தாண்டில் குரு மிதுன ராசிக்கும், சனி மீன ராசிக்கும், ராகு கும்பத்திற்கும், கேது சிம்ம ராசிக்கு என பெயர்ச்சியாக உள்ளனர். இதன் காரணமாக எந்தெந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமையும் என தெரிந்து கொள்வோம். மார்ச் 29ல் சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். மே 14ம் தேதி குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார். மே 18ல் ராகு மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னியிலிருந்து சிம்ம ராசிக்கும் மாற உள்ளனர். 2025ல் நடக்கும் கிரக பெயர்ச்சி, கிரக சேர்க்கை காரணமாக ரிஷபம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மேம்படுதல் என பல நன்மைகள் ஏற்படும். இங்கே பொதுவாக சொல்லப்பட்டுள்ள பலன்களில் ஒரு சில பிரச்சனைக்குரிய பலன்கள் சொல்லப்பட்டுருந்தால் அச்சப்பட தேவையில்லை. என்பதை தெரிவித்து கொள்கிறேன். ஏன் எனில் அவரவர் ராசிக்கேற்ற தெய்வங்களை வணங்குவதாலும், தினசரி தெய்வ வழிபாடு செய்வதாலும், அவரவர் சக்திக்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் பிரச்சனைக்குரிய பலன்கள் மாற்றி நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒரு சிலருக்கு ஜாதக ரீதியாக யோக திசை நடைபெறுமானால் வரும் கெடு பலன்கள் மாறி நல்ல பலன்கள் கிடைக்கும். கோட்சரத்தில் குரு, சனி, ராகு-கேது ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சாரம் செய்து தசா புத்தியும் நல்ல முறையில் நடந்தால் பல யோகமான பலன்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு ராசி நேயரும் அவரவர் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தையும், குல தெய்வத்தையும், சித்தர்கள் (அல்லது) மகான்களை முறையாக வணங்கி பரிபூர்ண அருளை பெறுமாறு எல்லாம் வல்ல இறைவனை யாம் ப்ராத்திக்கிறோம். ஜோதிட பலன்களை கணித்து எழுதியவர் "ஆலந்தூர்" A.வினோத் குமார், Ph.d (Astrology) |
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831