இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் முக்கிய பலன்களை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் முதல் சனிபகவான் உங்களின் சுக ஸ்தானத்தில் பெயர்ச்சிப்பதால் சாதகமாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தொழில், நிதி வாழ்க்கை, உறவுகள் போன்றவற்றில் நல்ல பலன்களைப் பெற முடியாது.
இந்த ஆண்டு குருவின் பெயர்ச்சி ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு நன்றாக இருக்கும். ஆனால் இதற்குப் பிறகு, நிதி வாழ்க்கை பலவீனமாக இருக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லாமல் போகலாம். இருப்பினும், வருட ராசி பலன் ஆம் ஆண்டில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் நிலை உங்கள் வாழ்க்கையில் வெற்றியையும் செழிப்பையும் தரும். குருவின் எதிர்மறை நிலை காரணமாக, உங்கள் செலவுகள் அதிகரிக்கக்கூடும் மற்றும் அவற்றை நிர்வகிப்பது உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் துணையுடனான உங்கள் உறவு பலவீனமடையக்கூடும்.
இந்த வருடம் நீங்கள் முக்கியமாக செய்யவேண்டியது என்னவென்றால் வீண் சந்தேகங்கள், மன அழுத்தம், கோபதாபங்கள் இவை எல்லாவற்றையும் விட்டொழிக்க வேண்டும். இந்த வருடம் நீங்கள் சில மாற்றங்கள் எதிர்பார்பீர்கள், அது கண்டிப்பாக நடக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பணவரவு உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்றது போல் இருக்கும். கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையுடன் குடும்பம் நடத்துவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். சொந்த வீடு, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. விரும்பிய வேலை மாற்றம் உண்டு. வெளியூர் பயணங்கள் நன்மையை தரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்போதும் காப்பாற்ற நினைப்பீர்கள். பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும் சரி குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தாலும் சரி எல்லாம் தாற்காலிகமே. உடல் நலனில் அதிகம் கவனம் எடுத்துக்கொள்ளவும். வீட்டில் திருமணம் வயதில் உள்ளவர்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். வண்டி வாகன பராமரிப்பு செலவு அதிகமாகும். புதிதாக சொத்து வாங்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு வரும். உங்கள் பேச்சில் கவனம் தேவை. தற்போது பணம் பல வழிகளிலும் வந்து உங்கள் சேமிப்பை உயர்த்தும். சிலர்க்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளின் மூலம் தனவரவு உண்டாகக்கூடும். பண வசதி காரணமாக உங்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவீர்கள். சொந்த வீடு வாங்கும் திட்டம் மனதில் இருக்கும். எப்போதும் அலைச்சல்கள் சற்று கூடுதலாகவே இருக்கும். சில நேரங்களில் பொருளாதார நிலையில் பின்னடைவும், முயற்சிகளில் தடங்கலும் ஏற்பட நேரும். தொடர் அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். உடல் நல தொந்தரவு இருக்கும், இருப்பினும் பெரிய பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லை. சுப நிகழ்ச்சிகளில் ஒரு சில தடைகள் ஏற்பட்டு பிறகு சீராகும். திருமண சம்பந்தமான பேச்சுகள் தொடங்க சிறிது தாமதமாகும். வருமானத்தை மீறிய செலவுகள் வரக்கூடும். எனினும் சிக்கனத்தை கடைபிடித்து வந்தால் கடன்களை தவிர்க்கலாம். குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் நேரக்கூடும். எதையும் சரியாக எடைபோடக் கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. எந்த பிரச்சனையாக இருந்தாலும், அதை தைரியமாக சந்திக்க முடியு. ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் இருக்கும். எதையும் திட்டமிட்டு நடத்த கூடியவர்கள். இது ஏழரை சனிக்காலம் என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்தவும்.
உத்யோகத்தில் சிறப்பான ஒரு முன்னேற்றத்தை காணலாம். வேலையில் ஆர்வம் பிறக்கும். வேலை பளு குறைய ஆரம்பிக்கும். உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்யோகத்தில் ஒரு சில சிரமங்கள் இருந்தாலும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எதோ ஒரு சில காரணங்களால் வேலையின்றி இருப்பவர்களுக்கு விரைவில் நல்ல இடத்திற்கு வேலைக்கு செல்ல வாய்ப்புண்டு. பணியில் கவனமாக இருக்கவும். பணியில் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரத்தில் அனுகூலமான போக்கு காணப்படும். புதிய தொழிலையும் தொடங்க வாய்ப்புண்டு. தொழில் சம்பந்தமான வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்து கொள்ளவும். உங்களுக்கு தொழில், வியாபாரம் சம்பந்தமாக நிறைய ஆலோசனைகள் கிடைக்கும்.
பரிகாரம் : வியாழக்கிழமை தோறும் ஸ்ரீ ராகவேந்திரரை மனதார வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831