இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் கன்னி ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம்.
இந்த வருடம் முதல் புது முயற்சிகள் நல்ல பலனை தரும் ஆண்டு. குடும்பத்தாரின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் நிலவிவந்த குழப்பத்திற்கு விடுதலை கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் தீரும். வீடு, மற்றும் வாகனத்தை மாற்றுவீர்கள். கணவன் மனைவி உறவில் அன்பு கூடும். பூர்விக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். உங்களுக்கு எதிராக வேலை பார்த்தவர்கள் காணாமல் போவார்கள். உங்கள் செல்வாக்கு உயர தொடங்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் இருக்கும். நீங்கள் எடுத்த காரியம் நிறைவேறும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வீடு, மனை வாங்கும் எண்ணம் கூடிவரும். வெளிநாட்டு பயணங்கள் ஏற்படும். பூர்விக சொத்துக்கள் கைக்கு வரும். பிரிந்து சென்ற, உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் உங்களோடு வந்து இணைவர். வெளிநாட்டு வாய்ப்புகள் வரும். ஆடம்பர செலவுகளை குறைத்து சிக்கனத்தை கடைபிடிக்கவும். மற்றவர்களுக்கு கடன் கொடுத்து பிரச்சனையில் சிக்கி கொள்ள வேண்டாம். மனக்கவலைகள் மறையும். பணப்புழக்கத்தில் சரளமான நிலை காணப்படும். வரவுக்கு மீறிய செலவுகளால் பணப்பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புண்டு. இருப்பினும் குடும்பத்திற்கு தேவையான பணம் கையில் இருக்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற நேரும். பொருட்களின் மீது அடமானம் வைத்து பணம் பெற்றுகொள்ளுவீர்கள். தாராளமான பணம் புழக்கம் தாராளமாகா இருக்கும். எடுக்கும் முயற்சிகள் யாவும் கைகூடும். திட்டமிட்டபடி திருமணம் நடக்கும். சிலர் வசித்து வரும் வீட்டை மாற்றி வசதியான வீட்டிற்கு குடியேறுவார்கள். குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவீர்கள். புது வண்டி ஒன்றை வாங்குவீர்கள். தாயாரின் உடல் நளினில் கவனம் தேவை. உறவினர்களுடன் பகைமை வரலாம். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாகும். புது முயற்சிகள் நல்ல பலனை தரும்
இந்த வருடம் .தொழில், வியாபாரம் விருத்தியாகும். புது தொழில், யோசனை மனதில் உதயமாகவும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் தொழில் ஆரம்பிக்கலாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முதல் போடாமல் முன்னேற வழி காணலாம். உத்யோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். உத்யோகத்தில் அலுவலுக ரீதியான நற்பலன்களையும் சலுகைகளையும் இப்போதைக்கு எதிர்பார்க்க இயலாது. பணியில் வேலை சுமை கூடும், சில சமயங்களில் குறையவும் செய்யும். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலுக விஷயமான எல்லா நன்மைகளும் கிடைக்கும். ஒரு சிலருக்கு மறைமுக வருமானங்கள் கிடைக்கவும் வாய்ப்புண்டு. மிக சிறிய அளவில் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும். எந்த தொழிலாக இருந்தாலும் பண விஷயத்தில் வரவு செலவு கணக்குகளை சரியாக வைத்து கொள்ளவும்.
இந்த புத்தாண்டு உங்களுக்கு பல நன்மைகளை வாரி வழங்கி உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கும். எனவே இந்த புத்தாண்டு இனிய புத்தாண்டாக அமையும்.
பரிகாரம்: உங்கள் கஷ்டங்கள் தீர வருடம் முழுவதும் திருநீர்மலையில் உள்ள ரங்கநாத பெருமாளை வணங்கி வழிபடவம்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831