இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் கும்ப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டில், சனி பகவான் உங்கள் இரண்டாம் வீட்டிற்கு அதிபதியாக இருப்பதால், மார்ச் மாதம் முதல் கும்ப ராசிக்காரர்களுக்கு சராசரி பலன்களை வழங்குவார். குரு பகவானின் பெயர்ச்சி வருட ராசி பலன் சராசரி பலன்களையும் தரும். இந்த ஆண்டு ராகு மற்றும் கேதுவின் சுப நிலை உங்கள் வாழ்க்கையில் மகத்தான வெற்றியையும் செழிப்பையும் தரும். பணம் சம்பாதிப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
இந்த 2025-ல் பொருளாதார நெருக்கடிகளை சாமர்த்தியமாக எதிர்கொள்ள இயலும். கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் அதை அறவே தவிர்க்கவும். ஆரோக்கிய பிரச்சனை வந்தாலும் சரி சிறு சிறு தொல்லைகள் ஏற்பட்டாலும் எதையும் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம். உடல் நலத்தில் எதாவது சின்ன, சின்ன தொந்தரவுகள், பிரச்சனைகள் வந்து, சிறிதளவு வைத்திய செலவுகள் ஏற்படுவதுற்கும் வாய்ப்பு காணப்படுகிறது. வீண் விரயங்களை முடிந்த வரை தவிர்க்கவும். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்ற முடியும். மனதளவில் ஒரு சில பிரச்சனைகள் இருத்தலும் அதை பேசி சரி செய்து கொள்ளவீர்கள். பிரியமானவர்கள் வழியில் மனஸ்தாபம் ஏற்பட்டு பின் சரியாகும். குடும்பத்தில் பண புழக்கம் அதிகரிக்கும். பல பெரிய பதவிகள் உங்களை தேடி வரும். தான தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். திருமண தடைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இப்போது அது கிடைக்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. வீட்டில் வரும் பிரச்சனைகளை பேசி சரி செய்து கொள்வீர்கள். உங்கள் முன்னேற்றத்தில் சிறு சிறு தடைகளும், முயற்சிகளில் தடங்கலும் ஏற்படும், இருப்பினும் கடைசியில் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி இருக்கும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். செலவினங்கள் அதிகமாவதால் கடன் வாங்கும் சூழ்நிலை வரலாம். சுப நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி நடக்கும். உறவினர்களுடன் சில நேரங்களில் மனஸ்தாபம் வரலாம். குடியிருக்கும் வீட்டை. மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். முன்னேற்றத்திற்கான சூழ்நிலை மிகவும் பிரகாசமாக காணப்படுகிறது. பண புழக்கம் மிகவும் தாராளமாக இருக்கும். சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்றி புது வீடு வாங்குவர். பல ஆடம்பர பொருட்களை வாங்குவதன் மூலம் சந்தோசம் அடையும் வாய்ப்பு உண்டு. பணம் நடமாட்டம் தாராளமாக இருக்கும். புத்திசாலித்தனமாக பணத்தை சேமிக்கவும், அல்லது பத்திரமான முறையில் பணத்தை சேமிப்பது நல்லது. குடும்பத்தில் எல்லோருடைய ஒத்துழைப்பும் தாராளமாக கிடைப்பதால் மனதில் புத்துணர்ச்சி ஏற்படும்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த புது வருடத்தில் உற்சாகமான பலன் கிடைக்க போகிறது, அனால் அதற்காக நீங்கள் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. சிறு சிறு பிரச்சனைக்கு எல்லாம் மனம் வருந்த வேண்டாம். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பொறுப்புகள் சிறிது தாமதம் ஆனாலும் கண்டிப்பாக உங்கள் வந்தடையும். பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் உங்களை சந்தோஷபடுத்தும். மேலதிகாரிகளின் ஆதரவு உண்டு. வேலையின்றி இருப்பவர்களுக்கு சீக்கிரத்தில் ஒரு நல்ல வேலை கிடைக்கும்.வேலையின்றி இருப்பவர்கள் சிறியளவில் புது தொழில் ஒன்றை தொடங்கலாம். அது நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் தரும். தொழில் வகையில் இருந்த போட்டி குறையும். தொழில், விஷயமாக அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும். தொழில், வியாபாரத்தில் முடிந்த வரை புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் கூட்டாளியாக இருப்பவர்களுடன் நல்லுறவு ஏற்படும். கூட்டுத்தொழில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வருட தொடக்கத்தில் தொழில், வியாபாரம் மந்த வகையில் இருந்தாலும் போக போக தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடந்து நல்ல லாபம் காணுவதுற்கும், வருமானம் கூடுதலாக வருவதுற்கும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த ஆண்டு கிரகங்கள் நற்பலன் தரப்போவதால் இந்த புத்தாண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக அமையும்.
பரிகாரம் : கால பைரவரை வணங்கி வழிபட உங்கள் கஷ்டங்கள் தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831