இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் மகரம் ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டில், சனி பகவான் உங்கள் தைரிய ஸ்தானத்தில் அமர்வதால், மார்ச் 2025 முதல் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், சனி பகவான் உங்களை உங்கள் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வார். வருட ராசி பலன் 2025 ஆண்டு குரு பெயர்ச்சி உங்களுக்கு பணம் தொடர்பான விஷயங்களில் வெற்றியைத் தரும். நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவும் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவார்கள்.
பணப்புழக்கம் ஓரளவு சொல்லுன்படி இருக்கும். வெளியில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். இந்த வருடம் உங்களுக்கு மனத்துணிவு அதிகமாகும். உங்கள் செயல் திறனில் வேகமும் விவேகமும் இருக்கும். பல புதிய திட்டங்களை அமல்படுத்த முடியும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உங்கள் புகழ் ஓங்கும் படியான செயல்களை செய்வீர்கள். திருமண முயற்சிகள் நிறைவேறும். புது வீடு வாங்கி அதில் குடி பெயர முடியும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியம் சீராகும். கணவன் மனைவிடைய ஒற்றுமை அதிகரிக்கும். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் மூலம் உதவி கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும். புதிய விடு, மனை வாகன யோகம் அமையும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடையின்றி நடக்கும். தொழில், மற்றும் பணியில் இருந்த மந்த நிலை மாறும். கோர்ட் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். வெளிநாட்டு பயணங்கள் மூலம் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிதாக சொத்து வாங்கினால் கூட அதில் வில்லங்கம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உடல் அலைச்சல் அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். உங்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அது குறைய ஆரம்பிக்கும். வசதி வாய்ப்புகள் பெறுக தொடங்கும். வீடு வாகன வகையில் சில செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியூர் பயணங்கள் அடிக்கடி உண்டாகும். எல்லா வகையிலும் முன்னேற்றம் உண்டாகி, உங்கள் வாழ்க்கை பாதை உயர தொடங்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கடன்கள் மளமளவென தீரத் தொடங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி குவிப்பீர்கள். பணம் பல வழிகளில் வந்தாலும் செலவுகளும் காத்துக் கொண்டுருக்கும். குறிப்பாக உங்கள் வளர்ச்சிக்கான செலவு சற்று கூடுதலாகவே இருக்கும். இது வரை பட்ட கஷ்டங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க போகிறது என்பது தான் உண்மை. வீடு, தோட்டம், நிலபுலன்கள், வாகனங்கள் என பொருள் சேர ஆரம்பிக்கும். சில நேரங்களில் குடும்ப தேவைகளை நிறைவேற்றப் பெரிதும் சிரமப்பட வேண்டியிருக்கும். மனைவின் உதவி வேண்டிய நேரத்தில் கிடைக்கும். சிலர்க்கு எதிர்பாராத தனவரவு உண்டு. குடும்பத்தில் மதிப்பு, மரியாதை இருக்கும் பெண்களின் ஆதரவு உண்டு. பொருள் சேரும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பத்தில் இருந்து வரும் பின்தங்கிய நிலை படிப்படியாக மறையும். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிரச்சனை மறையும். அவர்களின் வருகையும், அவர்களால் நன்மையையும் கிடைக்கும்.
உத்யோகம் பார்க்கும் இடத்தில் ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் கிடைக்க பெறுவீர்கள். ஒரு சிலர்க்கு கூடுதல் வருமானம் கிடைக்கவும் வாய்ப்புண்டு. சிலர் புதிய தொழில், தொடங்கவும், இப்போது செய்து வரும் தொழிலை மாற்றி பார்க்க முயற்சி செய்வீர்கள். ஓய்வு இல்லலாமல் தொடர்ந்து உழைக்க முடியும். அலைச்சலும், பயணங்களும் அடிக்கடி ஏற்பட்டாலும் அவை உங்களுக்கு எல்லா விதத்திலும் சாதகமாகவே இருக்கும். தொழில் வகையில் பல புதுமையான திட்டங்களை புகுத்தி வெற்றி பெற முடியு. பெயரும் புகழும் ஏற்படும். அலுவலுக ரீதியான பணிகளின் சுமை அதிகமாக இருக்கக்கூடும். உத்யோகம் சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்களும் அமைய கூடும் என்பதால் உடலில் அலுப்பும் சலிப்பும் ஏற்படும்.வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். மனநிம்மதியோடு வேலையை கவனிக்க கூடிய சூழ்நிலை ஏற்படும். உயரதிகாரிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்க பெறுவீர்கள். உழைப்பு வழக்கம் போல் இருந்தாலும், வருமானம் இருமடங்காக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் சில சிக்கல்கள் வரும். தொழில், வியாபாரம் நன்கு சுறுசுறுப்பாக நடக்கும். தொழில், வியாபாரத்திற்க பட்ட பழைய கடனை இப்போது அடைக்கும் சந்தர்ப்பம் வரும்.
இந்த ஆண்டு பெரியளவில் பாதிப்பு ஏதும் வர வாய்ப்பு இல்லை. எனினும் 2025ஆம் ஆண்டு உங்களுக்கு யோகமான ஆண்டாக அமையும்.
பரிகாரம் : சனிக்கிழமைகளில் சனீஸ்வரனை தீபமேற்றி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831