இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் மீன ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டில், சனி பகவான் உங்கள் முதல் ராசியில் அமைந்திருப்பதால் மார்ச் 2025 முதல் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தர முடியாது. அத்தகைய சூழ்நிலையில், தொழில், காதல் மற்றும் நிதி வாழ்க்கை போன்ற துறைகளில் சனியால் சுப பலன்களைத் தர முடியாது. இந்த ஆண்டு குரு பெயர்ச்சி உங்கள் மூன்றாவது வீட்டில் இருப்பதால் உங்கள் வேலையில் நல்ல வெற்றியை வழங்க முடியாது. இது தவிர, வருட ராசி பலன் 2025 ஆம் ஆண்டில் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் நிலை உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும். நீங்கள் பணம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற தாழ்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வருடம் உங்கள் கையில் காசு பணம் நிறைய புரள ஆரம்பிக்கும். எந்த ஒரு செயலையும் ஆண்டின் முற்பகுதியில் தொடங்க முடியும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். அது வெற்றிகரமாக முடியும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். சகல வசதி வாய்ப்புகள் கிடைக்கும். திருமணம் வயதில் உள்ள ஆண், பெண் இருவருக்கும் நல்ல வரன் கிடைக்கும். புதிதாக திருமணம் ஆன தம்பதிகளுக்கு இந்த வருடம் குழந்தை பாக்கியம் கிட்டும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதில் புரியாத வேதனை குடி கொண்டு இருக்கும், இருப்பினும் அது தாற்காலிகமே. உறவினர்கள் வகையில் வீண் விரோதம் உருவாகலாம். நிதானமும், பொறுமையும் அதற்கு தீர்வாக அமையும். வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் நிறைய நன்மைகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நீங்கள் நினைத்ததை துணிந்து செய்ய முடியும். நீண்ட நாள் உடல் உபாதைகள் குணமாகும். குடும்பத்தில் எதிர்பார்த்த சந்தோஷம் இருக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பெற்றோர் உடல் நலனில் கவனம் தேவை. வண்டி வாகனங்களில் மிகுந்த கவனம் தேவை. யாரிடமும் வீண் விவாதம் செய்ய வேணாம். சொத்து விஷயத்தில் கவனம் தேவை. கடன் வாங்கவும் கொடுக்கவும் வேண்டாம். உங்கள் முன்னேற்றத்தில் ஒரே சீராக இருக்கும். எல்லா வகையிலும் அலைச்சலும், பதற்ற நிலையம் உண்டாகும். அடிக்கடி வெளியூர்ப் பயன்களையும் மேற்கொள்ள வேண்டிருக்கும். ஒரு சிலர், நீங்கள் வசிக்கும் வீடு, வியாபார இடம் போன்றவற்றை இருக்கும் இடத்திலேயே மாற்றியமைக்க நேரும் அல்லது வேறு புதிய இடத்துக்கு மாற்ற நேரும். பணம் வர வர செலவினங்களும் அதிகமாகி கொண்டுயிருக்குமே தவிர, கையில் பணம் தங்காது. சேமிப்புக்கு இப்போதைக்கு இடமில்லை. கடன் வாங்கும் சூழ்நிலை வந்தாலும் பெரிய தொகையாக கடன் வாங்கி பிரச்சனையில் மாட்டிக்கொள்ள வேண்டாம். அதைபோல் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். சிலருக்கு ஏதேனும் ஒரு வகையில் பணவரவு உண்டாகும். வெளிநாட்டு பயணமும் ஏற்படும். பொது காரியங்களில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை தொடங்கும். சிலர் புது வீடு மனை வாங்கி குடி புகவும் வாய்ப்புண்டு. வெளி நாடு செல்லும் யோகம் உண்டு.
செய்தொழிலில் வெற்றி காணலாம். ஒரு சிலருக்கு புதிய தொழில், அமையும். தொழில், வியாபாரம் சக்கை போடு போடும். எதிர்பார்த்ததை விட தொழிலில் லாபம் இரு மடங்காக வரும். உங்கள் விருப்பங்கள் ஒவொன்றாக நிறைவேறும். உத்யோகத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து சலுகைகளும் கிடைக்கும். உத்யோகத்தில் வருமானம் கணிசமான அளவு உயரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் உயர் அதிகாரிகளின் ஆதரவும் உங்களை ஆச்சரிய பட வைக்கும். உத்யோகத்தில் அதிக வேலை பளு காரணமாக உடல் நலத்தில் குறைபாடுகள் தோன்றக்கூடும். எனினும் ஒரு சில மருத்துவ செலவிற்கு பின் குணமாகிவிடும், கவலை பட தேவையில்லை. வேலையில் ஒரு சில நேரங்களின் விருப்பு வெறுப்பு வந்தாலும் உயரதிகாரிகளை அனுசரித்து செல்லவும். பணியில் உங்களுக்கான நல்ல நேரம் வரும் வரை பொறுமையை கடைபிடிப்பது எல்லா வகையிலும் நன்மை தரும்.
இப்புத்தாண்டு தொடக்கத்தில் அமைந்த சாதகமான சஞ்சாரம் உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமைய வழி வகுக்கும்.
பரிகாரம் : வியாழக்கிழமைகளில் விரதமிருந்து குரு பகவானை மனதார வணங்கி வழிபடவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831