இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் மேஷ ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் முக்கிய பலன்களை பார்ப்போம். இந்த வருடம் தான் நினைத்த காரியத்தை சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் வேகமும் அதிகமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டு மார்ச் 2025 வரை மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சாதகமாக இருப்பார். இதற்குப் பிறகு, இந்த ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்கும். வருட ராசி பலன் குரு பெயர்ச்சி உங்களுக்கு பணம் சம்பாதிக்க வாய்ப்புகளையும் உருவாக்கி கொள்ள முடியும். மேஷ ராசிக்காரர்களுக்கு மார்ச் 2025 யில் தொடங்கும் ஏழரை சனி உங்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். ஆகஸ்ட் 2025க்குப் பிறகு நீங்கள் கணிசமான தொகையைப் பெற முடியும். இந்த ஆண்டு, நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் நிலை உங்கள் வாழ்க்கையில் வெற்றியையும் செல்வத்தையும் செழிப்பையும் தரும்.
அடுத்தவர்கள் உங்களுக்கு கட்டுப்பட வைக்க அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். உங்களிடம் உள்ள கோப தாபங்களை குறைத்து கொண்டு பிறரிடம் அனுசரித்து சென்றால் மட்டுமே உங்களால் வாழ்க்கையில் பெரியதொரு முன்னேற்றத்தை அடையமுடியும். ஓயாத உழைப்பும் எப்போதும் வேலை அலைச்சலும் இருக்கும். வாழ்க்கை தேடல் அதிகம் இருக்கும். நேரம் பார்க்காமல் உழைப்பது உங்களின் பிறவி குணம், இருப்பினும் குடும்பத்தின் மேலும் கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். நாம் உழைப்பதே நம் வீட்டிற்கு தானே என்பதை ஒரு போதும் மறந்து விட வேண்டாம். உங்களின் மனதை அழுத்திக் கொண்டுருந்த பல பிரச்சனைகள் விலகும். சொத்து வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களிடம் ஒற்றுமையை வளர்த்து கொள்வது நல்லது. உங்கள் பேச்சு திறமையும், பெருந்தன்மையும் பார்த்து மற்றவர்கள் அசந்து போவர். புதியவர்களின் நட்பு ஏற்படும். வெளியில் கை மாற்றாக கொடுத்திருந்த பணம் திரும்ப வரும். ஒரு சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். உங்களின் மனக்கவலைகள் படிப்படியாக குறையும். ஒரு சிலருக்கு புது வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தெய்வ அனுக்கிரகமும் எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. கையில் தாராளமான பண புழக்கம் இருந்து வரும். பெரிய மனிதர்கள் மற்றும் மகான்களின் சந்திப்பும் அதனால் ஒரு சில நன்மைகளும் நிகழ வாய்ப்புண்டு. குல தெய்வ வழிபாடு, மத சடங்குகள் போன்றவற்றை நிறைவேற்றி நிம்மதி பெற முடியும். பொன், பொருள் வாங்கி மகிழ முடியும். ஆன்மீக விஷயங்களில் ஈடுபட்டு மன அமைதி பெற முடியும். தெய்வீகமான விருப்பங்களை எல்லாம் நிறைவேற்ற இயலும். ஒரு சிலருக்கு வெளிநாடு சென்று வரும் வாய்ப்பு அமையும். மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உடல் நலத்தில் ஒரு சில தொந்தரவுகள் வரலாம், மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் எவ்வளவு தான் கையில் வந்தாலும், வீண் செலவுகள் நிறைய வரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். எந் ஒரு பிரச்சனை என்று வந்தாலும் அதை கடைசி வரை எதிர்கொள்ளும் சாமர்த்தியம் இருக்கும்.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மேல் அதிகாரிகளிடம் நல்லுறவு ஏற்படும். பணியிடத்தில் உங்கள் மரியாதை உயரும். நீங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதே நேரம் சக ஊழியர்களின் நட்பையும் தக்கவைத்து கொள்ளவும். இருப்பினும் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். தொழிலில் படிப்படியாக வளர்ச்சி காணப்படும். தொழில், வியாபாரத்தில் நிதானமாக நடந்துகொண்டால் நல்ல லாபங்கள் அடையாளம். மற்றபடி தொழில் ரீதியாக வரும் போட்டிகளை எல்லாம் சமாளிக்க முடியும். ஒரு சிலர் சிறிய முதலீட்டில் புது தொழில் தொடங்க வாய்ப்புகள் வரும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில், எந்த பிரச்சனையும் இருக்காது. புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.
எனவே இந்த 2025-ல் ஆண்டு உங்களுக்கு பொதுவாக நல்ல பலன்களே ஏற்படும்.
பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் செவ்வாய்கிழமையில் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட உங்கள் கஷ்டங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தீரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831