இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் மிதுன ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை சனியின் நிலை சாதகமாக இருக்கும். சனி பகவானின் இந்த நிலை உங்களுக்கு தொழில் துறையில் நல்ல பலன்களைத் தரும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் திருப்தியையும் உங்கள் தொழிலில் முன்னேற்றத்தையும் பெற முடியும். இந்த நபர்கள் வெளிநாட்டிலிருந்து தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகளைப் பெறுவர். அத்தகைய வாய்ப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
இருப்பினும், சனி பகவான் 13 ஜூலை 2025 முதல் நவம்பர் 28, 2025 வரை வக்ர நிலையில் இருக்கும் போது, அந்த காலகட்டத்தில் உங்கள் அதிர்ஷ்டம் பலவீனமடையலாம். வருட ராசி பலன் ஆம் ஆண்டில், சனி பகவான் உங்கள் பத்தாவது வீட்டில் இருப்பார், எனவே இது உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் இரண்டையும் கொண்டு வரும்.
இந்த வருடம் மிதுன ராசிக்கு பல நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். புதிய விடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரியங்கள் வெற்றி பெரும். கடன் சுமை படி படியாக குறையும். உத்யோகத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் அமையும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உடல் நலனும், உள்ள நலனும் கூடும். தனவரவு அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகள் மறையும். மருத்துவ செலவுகள் உங்கள் கட்டுக்குள் இருக்கும். பணியில் அதிக அலைச்சல் இருக்காது. உங்கள் உழைப்புக்கு ஏற்ற மரியாதையும், பலனும் கிடைக்கும். குடும்ப நலனில் அதிகம் அக்கறைகொள்ளவும். வீட்டில் திருமணம் வயதில் உள்ளர்வர்களுக்கு திருமணம் கைகூடும் . மன நிம்மதி ஏற்படும். உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய சொத்தை இப்போது விற்றால் அதில் லாபம் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்க முடியும். உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதுமையான திட்டங்களைத் தீட்டி அதில் வெற்றி கிட்டும். ஒரு சில உடல் உபாதைகள் வரலாம் பெரிதாக கவலை பட தேவையில்லை தானாகவே சரியாகிவிடும். குடியிருக்கும் வீட்டை சீர்செய்ய சிறிது பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு சிலர் புது வீட்டிற்கு மாறும் சூழ்நிலை உருவாகும். மறைமுக எதிர்ப்புகள் வராமல் பார்த்துக்கொள்வீர்கள், அப்படி மீறி வந்தாலும் அதை திறமையாக சமாளித்துவிடுவீர்கள். உற்றார் உறவினர்கள் எப்போதும் உதவிகரமாக இருப்பார்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்தடையும். பணப்புழக்கம் ஓரளவு தாராளமாகவே இருந்து வரும். குடும்பத்தில் யாரரேனும் ஒருவரின் திருமண பேச்சு வார்த்தை சுமுகமாகத் தீர்வாகி, சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வெளிநாடு செல்லத் திட்டமிடும் சிலர் உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்க முடியு. சிலர் புது விடு கட்டி கிரக பிரவேசம் செய்யும் வாய்ப்புண்டு. ஒரு சிலர் இருக்கும் வீட்டை மாற்றி வசதியான வீட்டிற்கு குடி ஏறுவீர்கள். ஒரு சிலர் கையில் பணம் கிடைத்தவுடன் அடகு வைத்திருந்த பழைய பொருட்கள் மற்றும் நகைகளை திருப்பி மீட்பீர்கள். புதிய வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்புண்டு. சிலர் லாபகரமான வழிகளில் முதலீடு செய்ய வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் பரஸ்பர ஒற்றுமை நிலவி வரும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்று வருவீர்கள். ஆன்மீகத்தால் மனதில் அமைதி ஏற்படும். ஆன்மீக பெரியோர்களின் அறிமுகமும் ஆதரவும் கிடைக்கும். எந்த முயற்சிகளிலும் தடையும், தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. யாருக்கும் எந்த காரணத்தை வைத்தும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.
உத்யோகத்தில் நல்லதோர் முன்னேற்றம் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரிகளின் முழு ஆதரவையும் பெற முடியும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் சகஜமாக பேசி பழகுவீர்கள். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும், ஒரு சில நேரங்களில் வருமானம் அதற்கு மேலும் வரும். ஒரு சிலருக்கு புது வேலை வாய்ப்பு அமையவும் வாய்ப்புண்டு. பல பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வியபாரத்தில் புது முதலீடுகளை தாராளமாக மேற்கொள்ளலாம். தொழில், வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தி அதை விரிவாக்கமும் செய்ய முடியும். மேற்கண்ட காரியங்களால் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும்.
இந்த ஆண்டு கிரகநிலைகள் சாதகமாக உள்ளதால் உங்களுக்கு மிகமிக ஏற்றமும், உயர்வும் உண்டாகும் ஆண்டாக அமையும்.
பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831