இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் ரிஷப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டு ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் வரை சனி பகவான் சாதகமான பலன்களை வழங்குவார். வருட ராசி பலன் 2025 ஆம் ஆண்டில் குரு பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும், ஏனெனில் இது உங்களுக்கு நல்ல செல்வத்தையும் தொழில் துறையில் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும்.
தொழில், வழியில் மகத்தான வெற்றியையும் செல்வத்தையும் பெற இயலும். 13 ஜூலை 2025 முதல் நவம்பர் 28, 2025 வரை சனி பகவான் வக்ர நிலையில் இருக்கும் போது, உங்கள் வேலையில் எதிர்மறையான பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் பணம் சம்பாதிப்பது எளிதாக இருக்காது. 2025 ஆம் ஆண்டு உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதிக்கும் சாதகமாக இருக்கும்
பெரிய மனிதர்களின் நட்பும் அவர்களால் பல உதவிகளும் கிடைக்கும். ஒரு சிலர்க்கு பெண்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்புகள் விரைவாக அமையும். வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கும். புதிய வண்டி வாகன யோகம் உண்டாகும். இந்த 2025 ஆண்டு முதல் வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கு. குடும்பத்தில் உங்களின் முக்கிய திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவொன்றாக நிறைவேறும். கடன்களை திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபட இயலும். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். ஆன்மீகத்தில் மன நிம்மதி கிடைக்கும்.சுப நிகழ்ச்சிகளின் தொடர்பாக அலைச்சல், செலவுகள் ஏற்பட்டாலும், மனத்திருப்தி கொள்ளும் வகையில் நற்பலன் உண்டாகும். ஆன்மீக விஷயங்களுக்கு நிறைய பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும். மனதில் எப்போதும் இருந்து வரும் பதற்றம், பயம் ஆகியவற்றை இதன் மூலம் மறந்து நிம்மதி கிட்டும். குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படும், எனினும் அதை சாமர்த்தியமாக சமாளித்து வெற்றி பெற இயலும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. பெண்கள் ஆதரவு பெருகும். கையில் எடுக்கும் காரியத்தை சிறப்பாக முறையில் செய்து முடிக்க முடியும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்பட்டாலும், ஒரு சில நேரங்களில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புண்டு, ஆகையால் சற்று ஒதுங்கியே இருப்பது நல்லது.
வேலையின்றி இருப்பவர்கள் அதிக முயற்சி செய்தால் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். உத்யோகஸ்தர்களின் கோரிகைகளை மேலதிகாரிகள் நிறைவேற்றுவர். பணிடத்தில் சக ஊழியர்களின் நட்பு கிடைக்கும். வரும் இடையூறுகளை தாண்டி வேகமாக செல்ல
முடியும். பணியில் விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். பண வரவில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழில், வியாபாரத்தை திறமையாக வழி நடத்த முடியும். உங்கள் கௌரவமும், கணிசமாக உயரும்.
உங்கள் ராசிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும்.
பரிகாரம் : குல தெய்வ வழிபாடு எல்லா வகையிலும் சிறப்பை தரும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831