இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் துலாம் ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். 2025 ஆம் ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் முதல் சனிபகவான் உங்களின் சத்ரு ஸ்தானத்தில் பெயர்ச்சிப்பதால் சுப பலன்களை வழங்குவார். வருட ராசி பலன் 2025 சனி இந்த வீட்டில் இருப்பதால் தொழில், நிதி, நல்ல பலன்களைப் பெறலாம். நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் நிலை உங்கள் வேலையில் சராசரி வெற்றியைத் தரும் நீங்கள் பணம் தொடர்பான விஷயங்களில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
நீங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செலவுகளைச் சந்திக்க நேரிடும் மற்றும் குறைந்த நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் என்பதால், அவர்கள் மோசமான நிலையில் இருப்பதால், நீங்கள் உடல்நலப் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
இந்த வருடம் உங்களுக்கு பல சிரமங்களுக்கு மத்தியில் பல நன்மைகள் நடைபெறும். சென்ற ஆண்டில் பட்ட கஷ்டங்களுக்கு இந்த வருடம் தீர்வு கிடைக்க போகிறது. பண நடமாட்டம் இருப்பதால் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. உடல் நலனில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். எதிரி தொல்லை இனி மேல் இருக்காது. வழக்கு விவகாரங்களில் அனுகூலமான திருப்பு வரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. குடும்பத்தில் பெண்களால் மேன்மை கிடைக்கும். ஒரு சிலர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புண்டு. உறவினர்களிடையே ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை இது வரை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து உங்களிடம் வந்து சரணடைவர். கணவன் மனவிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். கடன் பிரச்சனைகள் முற்றிலும் தீரும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பேசும் போது நிதானம் தேவை. வாகன பயணத்தில் கவணம் தேவை. கடன் பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். பெரும்பாலும் உங்களுக்கு யோகமான பலன்களை நடக்கும் சூழ்நிலைகள் உருவாகும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் நீண்ட நாள் திட்டங்களை இப்போது நடைமுறை படுத்தி அதில் வெற்றி பெற முடியும். திருமண பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவியிடையே நெருக்கமான உறவு காணப்படும். குடும்பத்தில் குதூகுலமும் காணப்படும். பெரிய மகான்களின் ஆசியும் பெரியவர்களின் ஆசியும் கிடைக்க பெறுவீர்கள். ஜாதக ரீதியாக வீடு மனை வாங்கும் யோகம் உள்ளவர்களுக்கு இந்த ஆண்டு அது நிறைவேறும். நீங்கள் எப்போதும் பலரை வழிநடத்தக்கூடிய சக்தி உடையவராக சிலர் இருப்பீர்கள். உங்கள் திறமை எப்போதும் தனியாக பிரகாசிக்கும். கடுமையாக உழைக்கும் குணமும், எதிலும் சிந்தித்து முடிவு எடுக்கும் தன்மையும் உங்களை தனித்துக் காட்டும்.
உத்யோகத்தில் இருப்பவர்கள் வேளையில் தன்னமிக்கையோடு இருப்பர். வேலை பளு குறையும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். செய்யும் தொழிலிலும், வியாபாரத்திலும் நல்ல நிறைவான முன்னேற்றத்தை அடைய முடியும். கூடுதலாக துணைத் தொழில் ஒன்றை தொடங்குவதற்கும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரம் லாபகரமாக நடக்கும். புதிய தொழில், வாய்ப்புகள் தேடி வரும். பணியிடத்தில் நற் பெயர் கிடைக்கும். பணியாளர்களுக்கு உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். மேலதிகரின் ஆதரவு கிடைக்கும். உத்யோகத்தில் உள்ளவர்களில் சிலர் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் நிறைய உள்ளது. அலுவலகத்தில் அழுத்திக்கொண்டிருந்த வேலைச்சுமை சற்று குறையும். பணியில் முழு கவனத்தை செலுத்தி எல்லோருடைய ஆதரவையும் பெற முயற்சிக்கும். மறைமுக வருவாய் சிலருக்கு கிடைக்க கூடும். பணியில் நீங்கள் கூடுதல் பொறுப்பை விரைவில் ஏற்க வேண்டியது வரும்.
இந்த ஆண்டு ஒரு சில தடைகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் வர வாய்ப்பு இல்லை. உங்கள் ராசிக்குரிய பரிகாரங்களை செய்வதன் மூலம் இந்த ஆண்டை சிறப்பாக மாற்றலாம்.
பரிகாரம் : வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831