இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2025-ல் அடி எடுத்து வைக்கும் விருச்சிக ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.. 2025 ஆம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு, சனி உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால், மார்ச் 2025 முதல் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தருவதில் பின்தங்கியிருக்கலாம். இந்த ஆண்டு குரு பெயர்ச்சி உங்களுக்கு நல்ல செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும். இவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் வெற்றி கிட்டும். வருட ராசி பலன் ஆம் ஆண்டில், முக்கிய கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் நிலை மிகவும் சிறப்பாக இருக்காது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு நல்ல செல்வம், செழிப்பு மற்றும் வெற்றி கிடைக்காது. செல்வத்தை அடைவதற்கான பாதை சற்று கடினமாக இருக்கலாம். அதே நேரத்தில், உங்கள் ஏழாம் அதிபதியாக இருப்பதால், உங்கள் துணையுடன் உங்கள் உறவில் பரஸ்பர நல்லிணக்கத்தைப் பேணுவது உங்களுக்கு எளிதானது அல்ல.
இந்த 2025-ல் உங்கள் எண்ணங்கள் எதுவாயினும் அது நிறைவேறும். பண பிரச்சனைகள் முற்றிலும் அகலும். பழைய கடன் பிரச்சனை இப்போது தீரும். உடன்பிறப்புகள் இடத்தில் இருந்த பகைமை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். வாகன யோகம் ஏற்படும். உடல் நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிடத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சந்தோஷமும், மன நிம்மதியும் ஏற்படும். செய்யும் காரியத்தில் நிதானம் தேவை. புதிய சொத்துக்கள் சேர ஆரம்பிக்கும். உடல் நலனில் கவனம் தேவை.
குடும்ப வருமானம் எந்த வித தடையின்றி கிடைத்தாலும் அதற்கேற்றபடி செலவுகளும் வரிசையாகக் காத்துக் கொண்டுருக்கும், எனவே செலவு செய்யும் முன் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்கு யோசிப்பது நல்லது. வாழ்வில் சிக்கனத்தை கடைபிடித்தால் எந்த வித நெருக்கடிகளும் இல்லாமல் இருக்க முடியும். வீடு மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் திருமண வயதில் உள்ள ஆண், பெண்களுக்கு திருமணம் பேச்சு வார்த்தை தொடங்கி அதில் நல்ல தீர்வு ஏற்படும். நண்பர்கள் கூட்டம் உங்களை சுற்றி எப்பொழுதும் இருக்கும். எதிலும் பதற்றமடையும் போக்கைக் கைவிட்டு நிதானமாக நடந்து கொள்ளப் பழகிக் கொள்ளவும். வீணான வம்பு, வழக்குகளில் தலையிட்டு கவலையடைய வேண்டாம். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடா வேண்டாம். உடல் நலனில் அதிகம் அக்கறை எடுத்து கொள்ளவும். ஒரு சில உடல் உபாதைகளுக்கு மருத்துவ சிகிச்சைகள் மூலம் மட்டுமே சீரடையும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். ஆடை, அணிமணிகள், பொன், பொருள் சேர்க்கை ஆகியன ஏற்படும். ஜாதக ரீதியாக சொந்த வீடு யோகமுள்ளவர்கள் முயற்சி செய்தல் புது வீடு வாங்கலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும் வாய்ப்புண்டு. உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் தலையிடும் பழக்கத்தை கைவிடவும். குடும்பத்தில் சில சலசலப்புகள் தோன்றி மறையும். பணப்புழக்கம் நிலவும் என்பதால் முன்பு பட்ட கடனை இப்போது அடைத்து மன நிம்மதி அடைவார்கள்.
உத்யோகம் மற்றும் தொழிலில், நீங்கள் எடுக்கும் முடிவுகள் வெற்றி பெரும். உத்யோகத்தில் முக்கிய பொறுப்புகளும், பதவிகளும் உங்களை தேடி வரும். உத்யோகத்தில் ஒரு சில பிரச்சனைகள் வரலாம். இருப்பினும் அமைதியாகவும், கவனமாகவும் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தேக்க நிலை மாறும். நீங்கள் பங்கேற்கும் தொழில் அல்லது உத்யோகத்தில் உள் பிரச்னைகளைத் தீர்க்கக்கூடிய ஆற்றல் உங்களுக்கு உண்டு. உத்யோகஸ்தர்கள் சிறிதளவு கூடுதலான வேலை பளுவை சுமக்க நேரும். பொறுப்பும் அலைச்சலும் கூடுதலாகும். உத்யோகத்தில் உங்களுக்கு ஆதரவு ஓரளவு சத்தமாக இருக்கும். உத்யோகத்தில் அளவான வேலை என்றாலும் வருமானம் பெருகும் உடலிலும் உள்ளத்திலும் புது தெம்பை தரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும், அதை சாமர்த்தியமாக எதிர்கொள்ள இயலும். உத்யோக பணிகள் தொடர்பாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரலாம். அச்சமயங்களில் பயணத்தின் போது எச்சரிக்கை தேவை. மறைமுக வருமானங்கள் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
இந்த வருடம் உங்கள் ராசிக்குரிய எளிய பரிகாரங்கள் செய்து வந்தால் நலம் மிக்க ஆண்டாக அமையும்.
பரிகாரம் : வாரம் தோறும் செவ்வாய் கிழமைகளில் துர்கையை விளக்கு ஏற்றி வழிபடவும்.
முக்கிய குறிப்பு : இந்த 2025ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831